Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 சீனியர்களுக்கும் ஈகோவே இல்லை.. இளம் வீரர்களுக்கு அப்படி உதவுகிறார்கள்.. அபிஷேக் நாயர்!

அடிலெய்ட்: இந்திய அணியின் சீனியர் வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இளம் வீரர்களுக்கு உதவியாக செயல்பட்டு வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாக துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயார் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால், இந்திய அணி வீரர்கள் பிங்க் பாலில் பேட்டிங் செய்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொந்த காரணங்களுக்கான நாடு திரும்பினார்.

இதனால் இந்திய அணியின் பயிற்சியாளராக அபிஷேக் நாயர், மோர்னே மோர்கல், ரியான் டென்டஸ்காட்டே உள்ளிட்டோர் செயல்பட்டு வருகின்றனர். 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக 2 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நாளை விளையாடவுள்ளது. இந்தப் போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேசுகையில், இந்திய அணியை பொறுத்தவரை வெற்றி மட்டுமே ஒரே இலக்கு. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இதனை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவில்லை என்றாலும், இளம் வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள்.

ind vs aus border gavaskar trophy ravichandran ashwin

இந்திய அணியில் நடக்கும் விஷயங்களை புரிந்து கொண்டு சீனியர் வீரர்கள் உதவியாக இருப்பது மிகச்சிறந்த விஷயம். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நம்புவதை இந்திய வீரர்களும் பின்பற்றுகிறார்கள். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இந்திய வீரர்களுக்கு உதவுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணியின் மனநிலையும் அதுதான்.

தனிநபர் வளர்ச்சியோ, சாதனைகளோ அல்லாமல் இந்திய அணியின் வெற்றிக்கு உழைப்பதே கடமை என்பதை அனைவரும் அறிந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஒரேயொரு ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தருடன் மட்டுமே களமிறங்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணியின் அஸ்வின் விளையாடியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில், 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவற்றில் பெரும்பாலான விக்கெட்டுகள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான். இதனால் அஸ்வின் களமிரங்குவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அபிஷேக் நாயரின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, November 29, 2024, 21:25 [IST]
Other articles published on Nov 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+