Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துப்பாக்கியை வாங்கிட்டாரு.. ஜெய்ஸ்வாலுக்கு கொஞ்சமும் பயம் கிடையாது.. தெறிக்கும் தரமான மீம்ஸ்!

பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசி அசத்தியுள்ளார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஜெய்ஸ்வாலை வைத்து ரசிகர்கள் உருவாக்கி வரும் மாஸ் மீம்ஸை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்-க்கு பின், ரஜினிக்கு பின் விஜய் என்று அடுத்தடுத்த தலைமுறை ஏற்ப நடிகர்கள் வந்தனர். தற்போது விஜய் இடத்திற்கு சிவகார்த்திகேயன் வந்துள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் பெர்த் மைதானத்தில் சதமடித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இதன் மூலமாக சுனில் கவாஸ்கர்-க்கு சச்சின் டெண்டுல்கர், சச்சினுக்கு பின் விராட் கோலி என்று இருந்து வந்த நிலையில், விராட் கோலி இடத்திற்கு ஜெய்ஸ்வால் வந்துள்ளதாக ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் துப்பாக்கியை வாங்கிட்டாரு ரகம்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match cricket kl rahul yashasvi jaiswal

பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் மிட்சல் ஸ்டார்க் பவுலிங்கில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் 2வது இன்னிங்ஸில் அதே மிட்சல் ஸ்டார்க்கை பார்த்து, உன் பந்தில் வேகமே இல்லை என்று ஜெய்ஸ்வால் பதிலடி கொடுத்தார். இதனை விராட் கோலி ஒருமுறை பேசிய, நீ ஸ்லெட்ஜிங் செய்யும் போது எப்படி இருக்கிறதோ, அதேபோல் எதிரில் நிற்பவர் ஸ்லெட்ஜிங் செய்யும் போது தாங்கி கொள்ள வேண்டும்.. இல்லையென்றால் இந்த ஆட்டத்திற்கு வரக் கூடாது என்று சொன்ன வார்த்தைகளை வைத்து உருவாக்கப்பட்ட மீம் இதுதான்டா கிரிக்கெட் ரகம்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match cricket kl rahul yashasvi jaiswal

முதல் இன்னிங்ஸில் 74 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த கேஎல் ராகுல் நடுவரின் மோசமான முடிவு காரணமாக ஆட்டமிழந்தார். ஆனால் 2வது இன்னிங்ஸில் 176 பந்துகளை எதிர்கொண்ட கேஎல் ராகுல் 77 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். SENA நாடுகளில் கேஎல் ராகுலின் 8வது அரைசதம் இதுவாகும். இதனையும் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் துப்பாக்கியுடன் இரு கைகளிலும் சுடும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் போர்க்கண்ட சிங்கம்.. யார் கண்டு அஞ்சும் ரகம்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match cricket kl rahul yashasvi jaiswal

பொல்லாதவன் படத்தில் நடிகர் கிஷோர் தனுஷ் குறித்து பேசும் போது, "அந்த பையனுக்கு பயம் இல்ல" என்று சொல்வார். அதனை அப்படியே ஜெய்ஸ்வாலுக்கு மாற்றி, 22 வயதிலேயே ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய முதல் டெஸ்டில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட்-க்கு எதிரான நின்று சதம் விளாசிய ஜெய்ஸ்வாலை, "அந்த பையனுக்கு பயம் இல்ல" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ரியல் தக் லைஃப் ரகம்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match cricket kl rahul yashasvi jaiswal
Story first published: Sunday, November 24, 2024, 11:10 [IST]
Other articles published on Nov 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+