Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹேசல்வுட் சம்பவம்.. 150 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்.. மானம் காத்த ரிஷப் பண்ட், நிதீஷ் குமார்!

பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. 73 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, அறிமுக வீரரான நிதீஷ் குமார் ரெட்டியின் அபார ஆட்டத்தால் இந்திய அனி கவுரவமான ஸ்கோரை எட்டியது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகிறது. பெர்த் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

border gavaskar trophy india vs australia test match cricket rishabh pant vs

இதில் மிட்சல் ஸ்டார்க் வேகத்தில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் இளம் வீரராம தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் களமிறங்கிய அவர், ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறி கொண்டிருந்தார். இதனை புரிந்த ஹேசல்வுட் சரியான லெந்தில் பந்துவீச 23 பந்துகளில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து வந்த நட்சத்திர வீரரான விராட் கோலி ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட்டின் எதிர்பாராத பவுன்சர் பந்து காரணமாக 5 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுலும் 74 பந்துகளில் 26 ரன்களை எடுத்து வெளியேறினார். இதையடுத்து ரிஷப் பண்ட் ஒரு முனையில் நிற்க, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜுரெல் 11 ரன்கள் எடுத்திருந்த போது மிட்சல் மார்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 7வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் - நிதீஷ்குமார் ரெட்டி இருவரும் இணைந்தனர். இவர்கள் இருவரும் விரைவாக ரன்களை சேர்க்க, இந்திய அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. 7வது விக்கெட்டுக்கு இவர்கள் 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், கம்மின்ஸின் அபார பந்தில் ரிஷப் பண்ட் 37 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த டெய்லண்டர்களில் ஹர்சித் ராணா 7 ரன்களிலும், கேப்டன் பும்ரா 8 ரன்களிலும் வெளியேற, கடைசியாக நிதீஷ் குமார் ரெட்டி 59 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் மிட்சல் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Story first published: Friday, November 22, 2024, 12:53 [IST]
Other articles published on Nov 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+