Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச போட்டிகளில் முதல்முறையாக... 120 நாடுகளில் லைவ்... ஆஸி -இந்தியா தொடர் சாதனை!

அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகலிரவு போட்டி நாளை அடிலெய்டில் துவங்கவுள்ளது

4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியாக இந்த பகலிரவு போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி 120க்கும் மேற்பட்ட நாடுகளில் முதல்முறையாக லைவ்வாக ஒளிபரப்பாக உள்ளது.

பகலிரவு போட்டி நாளை துவக்கம்

பகலிரவு போட்டி நாளை துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நாளை பகலிரவு டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியாக இது நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன.

மிகப்பெரிய முயற்சி

மிகப்பெரிய முயற்சி

இந்தப் போட்டியை சர்வதேச அளவில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த தொடரையும் விட ஆஸ்திரேலியா -இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரை காட்டிலும் இந்த எண்ணிக்கை மிகவும் பெரியது. முதல்முறையாக இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

நாளை காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பு

நாளை காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பு

உலகளவில் மிகவும் எதிர்பார்ப்பிற்கு உரியதாக இந்த டெஸ்ட் தொடர் காணப்படுகிறது. இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இந்த தொடரை இங்கிலீஷ், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒளிபரப்ப உள்ளது. இந்த போட்டி நாளை இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

பாக்ஸ்டெல், காயோ ஒளிபரப்பு

பாக்ஸ்டெல், காயோ ஒளிபரப்பு

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், பர்மா, இந்தியா, மௌரீஷியஸ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பாக்ஸ்டெல், சேனல் 7 மற்றும் காயோ ஸ்போர்ட்ஸ் போன்ற சேனல்களில் இந்த தொடர் ஒளிப்பரப்பாக உள்ளது. மேலும் அமெரிக்கா, ஐயர்லாந்து, ஐரோப்பா, நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, December 16, 2020, 15:29 [IST]
Other articles published on Dec 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+