Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டிங் பயிற்சியை தொடங்கிய சுப்மன் கில்.. 2வது டெஸ்டில் கம்பேக்? பரிதாப நிலையில் கேஎல் ராகுல்!

அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் சுப்மன் கில் களமிறங்காத நிலையில், மீண்டும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் 2வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் கம்பேக் கொடுப்பார் என்று பார்க்கப்படுவதால், கேஎல் ராகுல் எந்த பேட்டிங் வரிசயில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடக்கவுள்ளது. டிச.6ஆம் தேதி தொடங்கவுள்ள போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

india vs australia test match shubman gill kl rahul vs


இதனால் இம்முறை பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் 2 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பிங்க் பாலில் விளையாடுகின்றனர். பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதன் மூலமாக இந்திய அணி வீரர்களுக்கு போதுமான பயிற்சியும், அனுபவமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் 2வது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் உள்ளிட்டோர் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஏ அணி வீரர்களுடன் இணைந்து இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்ட போது, ஸ்லிப் திசையில் ஃபீல்டிங் செய்த இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் விரலில் காயம் ஏற்பட்டது.

இதன்பின் ஸ்கேன் பரிசோதனையில் காயத்தின் தீவிரம் தெரிய வந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் களமிறங்கவில்லை. பின்னர் 2வது போட்டிக்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்ட போதும், சுப்மன் கில் பேட்டிங் பயிற்சியை தொடங்காமலேயே இருந்தார். இதனால் 2வது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் கேன்பெரா மைதானத்தில் சுப்மன் கில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். முதல் 30 நிமிடங்கள் த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் மூலமாக அதிவேக பந்துகளை எதிர்கொண்ட சுப்மன் கில், பின்னர் இந்திய அணி வீரர்களான பிரசித் கிருஷ்ணா, யாஷ் தயாள் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரின் பந்துகளை எதிர்கொண்டு பயிற்சி செய்தார்.

நாளை நடக்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் சுப்மன் கில் களமிறங்கும் பட்சத்தில், 2வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல், நம்பர் 6 பேட்டிங் வரிசைக்கு தள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 29, 2024, 12:08 [IST]
Other articles published on Nov 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+