Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் ஆஸ்திரேலியா.. "157 ரன்கள்" ஆட்டத்தை மாற்றியதே ட்ராவிஸ் ஹெட் தான்.. பேட் கம்மின்ஸ் உற்சாகம்!

அடிலெய்டு: 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியா அணிக்காக மிட்சல் ஸ்டார்க் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ட்ராவிஸ் ஹெட்டின் பேட்டிங் தான் ஆஸ்திரேலியா பக்கம் ஆட்டத்தை திருப்பியதாக கூறிய கம்மின்ஸ், முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலை வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. பெர்த் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு, அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி பதிலடி கொடுத்துள்ளது. இதனால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் அடுத்த போட்டியில் களமிறங்கவுள்ளன.

ind vs aus border gavaskar trophy pat cummins

பெர்த் தோல்விக்கு பின் கம்பேக் கொடுப்பது கடினம் என்று பார்க்கப்பட்ட போது, ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் எளிதாக செய்து காட்டியுள்ளார். இதுகுறித்து பேட் கம்மின்ஸ் பேசுகையில், பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆடிய ஆட்டத்தை விடவும் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்பினோம். தற்போது இப்படி தான் விளையாட வேண்டும் என்ற வகையில் ஆடி இருக்கிறோம்.

இந்தப் போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பெர்த் டெஸ்ட் தோல்வியால் எந்த கவலையும் அடையவில்லை. எங்கள் அணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை. நாங்கள் சிறந்த அணி என்பதை நன்றாக அறிவோம். ஸ்டார்க் போன்ற ஒரு பவுலர் அணியில் இருப்பது, மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு முறையும் எதிரணியின் விக்கெட்டை தொடர்ந்து வீழ்த்தி கொண்டே இருக்கிறார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பணியை செய்து வருகிறார். அவர் ஆஸ்திரேலியா அணிக்கு ஆடுவது எங்களுக்கு பெருமை. அடிலெய்டு மைதானத்தில் பேட்டிங் செய்ய ட்ராவிஸ் ஹெட் அதிகமாக விருப்பப்படுவார். அவரின் பேட்டிங் தான் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது. ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்கின் போது ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறும் நிலையில் இருந்தது.

ஆனால் ட்ராவிஸ் ஹெட் ஆட்டத்தை இழுத்து பிடித்து கொண்டு வந்துவிட்டார். முக்கியமானது 157 ரன்கள் முன்னிலை பெற்றது தான். அதேபோல் 2வது நாள் ஆட்டத்தின் கடைசி செஷனில் பவுலிங் செய்தது சரியான விஷயமாக பார்க்கிறேன். அதேபோல் ஸ்காட் போலண்ட் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அடுத்த வாரத்தில் ஹேசல்வுட் கம்பேக் கொடுத்துவிடுவார் என்றாலும், போலண்ட் ஆட்டம் அற்புதமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, December 8, 2024, 12:33 [IST]
Other articles published on Dec 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+