Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு ஆப்பு.. 2 கேட்சை மிஸ் செய்த சிராஜ், ரிஷப் பண்ட்.. 8வது சதத்தை விளாசிய ட்ராவிஸ் ஹெட்!

அடிலெய்டு: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான ட்ராவிஸ் ஹெட் 111 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். ட்ராவிஸ் ஹெட் கொடுத்த 2 கேட்ச் வாய்ப்பையும் முகமது சிராஜ் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் தவறவிட்ட நிலையில், அவர் சதமடித்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் உலகக்கோப்பை என்று இரு ஐசிசி கோப்பையை இந்திய அணி தவறவிட்டதற்கு ஆஸ்திரேலியா அணியின் ட்ராவிஸ் ஹெட் தான் முக்கிய காரணமாக இருந்தார். அந்த இரு போட்டிகளிலும் ட்ராவிஸ் ஹெட் சதம் விளாசியது, இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக மாறியது.

ind vs aus border gavaskar trophy travis head vs

இதனால் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ட்ராவிஸ் ஹெட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் அறிவுறுத்தி வந்தனர். பெர்த் டெஸ்ட் போட்டியில் பும்ரா மற்றும் ஹர்சித் ராணாவின் திட்டத்தால் இந்திய அணி எளிதாக வீழ்த்தியது. ஆனால் அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ட்ராவிஸ் ஹெட்டை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

ஏனென்றால் அடிலெய்டு மைதானத்தில் அவர் விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 2 சதம் மற்றும் 2 அரைசதத்தை விளாசி இருக்கிறார். இந்த நிலையில் 2வது நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றிய பின் ட்ராவிஸ் ஹெட் களம் புகுந்தார். இவர் களமிறங்கிய பின் பும்ரா மற்றும் அஸ்வின் இருவரும் அட்டாக் செய்தனர். அவர்களை சிறப்பாக டிஃபென்ஸ் ஆடிய ட்ராவிஸ் ஹெட், அஸ்வின் பந்தில் விரைவாக ரன்களை சேர்த்தார்.

இதனால் 63 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ட்ராவிஸ் ஹெட், அதன்பின் பவுண்டரிகளிலேயே ரன்களை குவிக்க தொடங்கினார். அதிலும் ஹர்சித் ராணாவின் பவுலிங்கில் வெளுத்து கட்டினார். விரைவாக 80 ரன்களை எட்டிய போது, அஸ்வின் பந்தில் கொடுத்த கேட்சை சிராஜ் தவறவிட்டார். தொடர்ந்து ஹர்சித் ராணா பவுலிங்கில் கொடுத்த கேட்சை ரிஷப் பண்ட் கோட்டைவிட்டார்.

இதன் காரணமாக ட்ராவிஸ் ஹெட் பக்கம் அதிர்ஷ்டமும் இருப்பதாக பார்க்கப்பட்டது. மீண்டும் பும்ரா அட்டாக்கில் வந்த போதும் அசராத அவர், 111 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ட்ராவிஸ் ஹெட் அடிக்கும் 8வது சதம் இதுவாகும். அதேபோல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ட்ராவிஸ் ஹெட்டின் 3வது சதம் இது. அதேபோல் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் ட்ராவிஸ் ஹெட் படைத்துள்ளார்.

Story first published: Saturday, December 7, 2024, 13:26 [IST]
Other articles published on Dec 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+