Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெட் பால் vs பிங்க் பால்.. இரு பந்துக்கும் என்ன வித்தியாசம்? இந்திய வீரர்கள் தடுமாறியது ஏன்?

அடிலெய்டு: பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடருக்காக, ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இன்று அடிலெய்டில் தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பால் டெஸ்டில் இந்திய அணி தடுமாறியுள்ளது. பெர்த் டெஸ்டில் அசத்திய இந்திய அணி, இந்தப் போட்டியில் ஏன் தடுமாறுகிறது? அதற்கு காரணம் ரெட் பால் மற்றும் பிங்க் பால் இடையே உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடுகளாக இருக்கலாம் என்றே தெரிகிறது.

2015 ஆம் ஆண்டு முதல் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலியா 12 போட்டிகளும், இந்தியா 4 போட்டிகளும் விளையாடி உள்ளது. இதன் மூலம் பிங்க் பால் டெஸ்ட் அனுபவத்தில் ஆஸ்திரேலியா இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது. ஆம், உங்களுக்கே தெரிந்திருக்கும். பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பிங்க் பால் எனப்படும் இளஞ்சிவப்பு வண்ண பந்து கொடுக்கப்படும். மற்றபடி பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு வண்ண பந்துதான் கொடுக்கப்படும்.

ind vs aus pink ball virat kohli

ரெட் பால் மற்றும் பிங்க் பால் வேறுபாடுகள்: ரெட் பாலில் வண்ணத்திற்காக டை மட்டுமே பயன்படுத்தப்படும் போது, பிங்க் பாலில் பாலியூரேதின் என்ற கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. ரெட் பாலில் சீம் வெள்ளை நூலில் தைக்கப்படும் போது, பிங்க் பாலில் கறுப்பு நூலில் தைக்கப்படுகிறது.

ரெட் பால் பொதுவாக புதிதாக இருக்கும் போது மட்டுமே ஸ்விங் ஆகும். ஆனால் பிங்க் பால் புதிதாக இருக்கும் போதும், இரவு நேரத்தில் விளையாடும் போதும் ஸ்விங் ஆகும் தன்மை கொண்டது. ரெட் பாலை போலல்லாமல் பிங்க் பால் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். சில சமயங்களில் 50 ஓவர்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

பிங்க் பாலில் உள்ள கூடுதல் கோட்டிங் காரணமாக, ரெட் பாலுடன் ஒப்பிடும் போது தேய்மானம் ஆக நீண்ட நேரம் எடுக்கும். பிங்க் பந்து வீசும்போது, அதிகளவில் பந்து சறுக்கவும் செய்யும். இதனால் பிட்ச் ஆன பிறகு வரும் வேகத்தில் மாறுபாடு ஏற்பட்டு பேட்ஸ்மேனை குழப்பும்.

ரெட் பந்தை, ஆஃப் ஸ்பின்னர்கள், இன்னிங்ஸ் ஆரம்பித்ததும் விரைவிலேயே பந்து வீச வந்து, சுழல வைக்க முடியாது. அப்படி சீக்கிரமாக பந்து போட வந்தாலும், ரெட் பந்தை ஒப்பீடு செய்தால், ஆப் ஸ்பின்னர்கள் விரும்பும் கோணத்திற்கு பிங்க் பந்து திரும்பி போகாது.

இரு அணிகளிலும் ஆப் ஸ்பின்னர்களான, நேதன் லயன் மற்றும் அஸ்வின் இருவரும் குறைந்த ஓவர்களே பவுலிங் செய்தனர். பிங்க் பாலில் தடவப்பட்டுள்ள கூடுதல் கோட்டிங் தான் அந்த பந்து தேய்மானம் அடைய நீண்ட நேரம் எடுத்து கொள்வதற்கு காரணம். அதேபோல் அதிகளவில் பந்து சறுக்கவும் அதே காரணமாக அமைந்துள்ளது.

இந்த வேறுபாடுகள் காரணமாக, பிங்க் பால் டெஸ்டில் பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் வெவ்வேறு வகையான சவால்களை எதிர்கொள்கின்றனர். பிங்க் பால் டெஸ்ட் என்பது ரெட் பால் டெஸ்டுடன் ஒப்பிடும் போது முற்றிலும் வேறுபட்ட சவால் நிறைந்த விளையாட்டு. இந்திய அணி பிங்க் பால் டெஸ்ட் அனுபவத்தில் குறைவாக இருப்பதும், பந்து செயல்படும் விதத்தை முழுமையாக புரிந்து கொள்ளாததும் இந்தப் போட்டியில் தடுமாறுவதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

Story first published: Friday, December 6, 2024, 18:13 [IST]
Other articles published on Dec 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+