Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: பகலிரவு டெஸ்ட்.. ஆட்டம் தொடங்கும் நேரம் என்ன? எந்த டிவி மற்றும் ஓடிடியில் பார்க்கலாம்?

அடிலெய்ட்: அடிலெய்ட் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டாஸ் மற்றும் தொடங்கும் நேரம், எந்த டிவி மற்றும் ஓடிடியில் நேரலையில் பார்க்க முடியும் என்பது தொடர்பாக அறிந்து கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் கேப்டனாக களமிறங்கிய ஜஸ்பிரிட் பும்ரா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றதோடு, இந்திய அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற வைத்தார். இது ஆஸ்திரேலியா ரசிகர்களையும் வியக்க வைத்தது.

ind vs aus border gavaskar trophy virat kohli

இதனைத் தொடர்ந்து அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி நாளை காலை தொடங்கவுள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால், இரு அணிகளின் வீரர்களின் பிங்க் பாலில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணி 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிங்க் பால் டெஸ்டில் விளையாடவுள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் காயம் காரணமாக விலகியிருந்த சுப்மன் கில்லும், 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடத்தப்பட்டாலும், இந்திய நேரப்படி முழுமையாக பகலில் மட்டுமே நடக்கவுள்ளது.

இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு டாஸ் போடப்பட்டு, முதல் செஷன் காலை 9.30 மணிக்கு தொடங்கி 11.30 மணி வரை நடக்கவுள்ளது. இதன்பின் 40 நிமிடங்கள் உணவு இடைவேளைக்கு பின் 2வது செஷன் மதியம் 12.10 மணிக்கு தொடங்கி 2.10 மணி வரை நடக்கவுள்ளது. இதன்பின் தேநீர் இடைவேளை அளிக்கப்பட்டு கடைசி செஷன் 2.30 மணிக்கு தொடங்கப்பட்டு, மாலை 4.30 மணியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய ரசிகர்கள் அதிகாலையில் எழுந்திருக்க தேவையில்லை. அதேபோல் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஓடிடியை பொறுத்தவரை டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியிலும் நேரலையில் பார்க்க முடியும். ஜியோ சினிமா செயலியை போல் இலவசமாக அல்லாமல் கட்டண பயனாளர்களால் மட்டுமே ஓடிடியில் பார்க்க முடியும்.

Story first published: Thursday, December 5, 2024, 8:12 [IST]
Other articles published on Dec 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+