வரிசையாக 3 பந்துகள்.. 2 ரிவ்யூ.. 2 விக்கெட்கள்.. பண்டியாவோட ஹாட்ரிக் தான் மிஸ் ஆயிடுச்சு #IndvsAus
Recommended Video

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த மூன்றாவது டி20 போட்டியில், 3 பந்துகளில் 2 முறை ரிவ்யூவும், 2 விக்கெட்களும் விழுந்தன.
3வது டி20 போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் எடுத்தது. இந்திய பந்துவீச்சு கொஞ்சம் சுமாராகவே இருந்தது.
எனினும், நாடு ஓவர்களில் இந்தியா படபடவென விக்கெட்களை எடுத்தது. அப்போது 3 பந்துகளில் அடுத்தடுத்து 2 ரிவ்யூ மற்றும் 2 விக்கெட்கள் விழுந்த சம்பவம் நடந்தது.

முதல் பந்தில் ரிவ்யூ
ஆஸ்திரேலிய அணி முதல் 8 ஓவர்களில் விக்கெட் விழாமல் ஆடி வந்தது. அப்போது ஒன்பதாவது ஓவரில் குல்தீப் சுழலில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் வெளியேறினார். அதே ஓவரின் கடைசி பந்தில் மாக்ஸ்வெல்லுக்கு LBW அவுட் கேட்டது இந்திய அணி. அம்பயர் அவுட் கொடுத்தார். மாக்ஸ்வெல் அதை ரிவ்யூ செய்த போது அது அவுட் இல்லை என தீர்ப்பு வந்தது.

2வது பந்தில் ரிவ்யூ, விக்கெட்
அடுத்து 10வது ஓவரின் முதல் பந்தில் க்ருனால் பண்டியா வீசிய பந்து ஷார்ட் காலில் பட்டது. இதற்கும் இந்திய அணி LBW கேட்டது. அம்பயர் அவுட் கொடுக்க, ஷார்ட் ரிவ்யூ செய்தார். ஆனால், இந்த முறை ரிவ்யூவில் அவுட் தான் என தீர்ப்பு வந்தது.

3வது பந்தில் விக்கெட்
அடுத்து 10வது ஓவரின் இரண்டாவது பந்தில் மெக்டெர்மாட் பண்டியா பந்தில் LBW அவுட் ஆனார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள் விழுந்த நிலையில் பண்டியா ஹாட்ரிக் விக்கெட் எடுக்க வாய்ப்பு கிடைத்தது. எனினும், அடுத்து வந்த கேரி பந்தை சமாளித்து ஆடினார். அதனால், ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது.

இந்தியாவிற்கு 165 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலியா தன் இன்னிங்க்ஸின் 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் இழந்து இருந்தது. குல்தீப் தவிர இந்திய அணியில் அனைவரும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications