For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.வுக்கு வடை போச்சே!! பொறுப்பாக ஆடிய கோலி, தினேஷ் கார்த்திக்.. இந்தியா வெற்றி #IndvsAus #T20

Recommended Video

3வது டி20 : 6விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

சிட்னி : சிட்னி நகரில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. தற்போது 3வது போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 164 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. கோலி, தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். இந்த போட்டிக்கு முன்பும், போட்டியிலும் நடந்த நிகழ்வுகளை காணலாம்.

வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா

வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா

மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா தொடரை சமன் செய்ய முடியும். ஒருவேளை இந்தியா தோல்வி அடைந்தால், ஆஸ்திரேலியா தொடரை வென்று விடும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா இந்த போட்டியில் பங்கேற்றது.

இந்திய அணியில் மாற்றம் இல்லை

இந்திய அணியில் மாற்றம் இல்லை

இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஆடிய அதே அணி தொடர்ந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஜேசனுக்கு பதில் மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம் பிடித்தார். ஸ்டார்க் சுமார் 2 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலிய டி20 அணியில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வீரர்கள் விவரம்

இந்திய அணி வீரர்கள் விவரம்

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், க்ருனால் பண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா மற்றும் கலீல் அஹ்மது.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்

ஆரோன் பின்ச் (கேப்டன்), டி'ஆர்சி ஷார்ட், கிறிஸ் லின், க்ளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பென் மெக்டெர்மாட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கோல்டர் நைல், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா, ஆண்ட்ரூ டை.

ஆஸ்திரேலியா பேட்டிங் விவரம்

ஆஸ்திரேலியா பேட்டிங் விவரம்

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. 8 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல் ஆடியது ஆஸ்திரேலிய அணி. அதன் பின் குல்தீப் சுழலில் பின்ச் 28, பண்டியா சுழலில் ஷார்ட் 33, மெக்டெர்மாட் 0, மாக்ஸ்வெல் 13, கேரி 27 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். லின் 13 ரன்களில் பும்ராவால் ரன் அவுட் செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் இழந்து இருந்தது. இந்திய அணியில் குல்தீப் தவிர அனைவரும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தனர்.

இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கு

165 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோஹித், தவான் அதிரடி துவக்கம் அளித்து ஆடினர். இவர்கள் 4வது ஓவரில் 20 ரன்களும், 5வது ஓவரில் 22 ரன்களும் அடித்தனர். அடுத்து ஸ்டார்க் பந்தில் தவான் 41, சாம்பா பந்தில் ரோஹித் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பொறுமையாக ஆடிய ராகுல் 20 பந்துகளில் 7 ரன்கள் மட்டும் அடித்து மீண்டும் ஒரு சொதப்பல் ஆட்டம் ஆடி ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து கோலி, தினேஷ் கடைசி வரை நின்று பொறுப்பாக ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். 19.4 ஓவர்களில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. கோலி 61, தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்துள்ளது.

Story first published: Sunday, November 25, 2018, 17:18 [IST]
Other articles published on Nov 25, 2018
English summary
India vs Australia third T20 at sydney - India under pressure for victory.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X