Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெஞ்சி கேட்டாலும் சிக்ஸ் அடிக்க மாட்டோம்.. வம்பு பண்ணிய ஆஸ்திரேலிய அணி!! #IndvsAus #T20

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த 3வது டி20 தொடரில் ஆஸ்திரேலியா ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 164 ரன்கள் அடித்தது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரில் ஆடி முடித்துள்ளது. கடைசி டி20 போட்டியில் வென்று இந்திய அணி தொடரை சமன் செய்துள்ளது

3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஓவருக்கு 8 ரன்கள் எடுத்து இருந்தாலும், தன் இன்னிங்க்ஸில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.

ஃபோர் தான் முக்கியம்

ஃபோர் தான் முக்கியம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் 8 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல் அற்புதமாக ஆடினர் அந்த அணியின் துவக்க வீரர்கள் பின்ச் மற்றும் ஷார்ட். இருவரும் ஃபோர் அடிப்பதில் மட்டுமே ஆர்வம் செலுத்தினர்.

அதிரடி வீரர்கள் கூட அடிக்கவில்லை

அதிரடி வீரர்கள் கூட அடிக்கவில்லை

பின்ச் அதிரடி பேட்ஸ்மேன் என்றாலும் சிக்ஸர்கள் அடிக்கவில்லை. அடுத்து மூன்றாவது இடத்தில், எப்போதும் நடு வரிசையில் ஆடும் அதிரடி வீரர் மாக்ஸ்வெல்லை களம் இறக்கினர். அவர் மிக பொறுமையாக ஆடி 16 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவரும் சிக்ஸர்கள் அடிக்கவில்லை.

ஆஸ்திரேலியா 164 எடுத்தது

ஆஸ்திரேலியா 164 எடுத்தது

10வது ஓவர் முதல் விக்கெட்கள் சரிய ஆரம்பித்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒற்றை ரன்கள் மற்றும் ஃபோர் அடிப்பதில் முழு கவனம் செலுத்தினர். இப்படி சிக்ஸர் அடிக்காமல் ஆடிய ஆஸ்திரேலிய அணி 164 என்ற நல்ல ஸ்கோரை எட்டியது.

இந்தியா 8 சிக்ஸ்

இந்தியா 8 சிக்ஸ்

எனினும், இந்திய பேட்டிங் பலத்தின் முன் இந்த இலக்கு எளிதான ஒன்றாகவே இருந்தது. ரோஹித், தவான் அதிரடி, கோலி, தினேஷ்-இன் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தன் இன்னிங்க்ஸில் 8

சிக்ஸர்கள் அடித்தது.

முதல் 2 போட்டிகளில் சிக்ஸ்

முதல் 2 போட்டிகளில் சிக்ஸ்

ஆஸ்திரேலிய அணி முதல் டி20 போட்டியில் 9 சிக்ஸர்களும், இரண்டாவது டி20 போட்டியில் 4 சிக்ஸர்களும் அடித்தது. ஆனால், அந்த இரண்டு போட்டிகளை விட அதிக ரன்கள் எடுத்த 3வது போட்டியில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.

ஏன்பா!! டி20 போட்டியை நாங்க பாக்கறதே சிக்ஸருக்காக தான்.. நீங்க என்னடான்னா சிக்ஸ் அடிக்க மாட்டேன்னு வம்பு பண்றீங்களே!!

Story first published: Monday, November 26, 2018, 12:04 [IST]
Other articles published on Nov 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+