Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. தொடரில் ஹாட்ரிக் அடித்த தோனி, கோலி, புவனேஸ்வர் குமார்.. எப்படின்னு தெரியுமா?

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்தியா மூன்று போட்டிகளில் பங்கேற்றது. இந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ஒரே மாதிரியான நிகழ்வுகள் மூன்று இந்திய வீரர்களுக்கு நிகழ்ந்துள்ளது.

தோனி, கோலி, புவனேஸ்வர் குமார் மூவரும் தான் அந்த வீரர்கள். இவர்கள் மூவரும், மூன்று போட்டிகளிலும் ஒரே மாதிரியாக அப்படி என்ன ஹாட்ரிக் செய்தார்கள்? வாங்க பார்ப்போம்.

தோனி ஹாட்ரிக் அரைசதம்

தோனி ஹாட்ரிக் அரைசதம்

தோனி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மூன்று அரைசதங்கள் அடித்து கலக்கி உள்ளார். முதல் போட்டியில் பொறுமையாக ஆடினாலும், அடுத்த போட்டியில் 54 பந்துகளில் 55 ரன்கள் அடித்து தான் பார்மில் இருப்பதை நிரூபித்தார். மூன்றாவது போட்டியில் 4வது இடத்தில் களமிறங்கிய தோனி மீண்டும் ஒரு அரைசதம் அடித்து அதகளம் செய்தார்.

மீண்டும் தோனி

மீண்டும் தோனி

தோனி கடந்த ஆண்டு முழுவதும் பார்ம் அவுட்டில் இருந்த நிலையில், 2019ஆம் ஆண்டின் முதல் மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் அரைசதம் அடித்து தன் அட்டகாசமான பார்மை நிரூபித்துள்ளார். இந்த மூன்று சதங்களுடன் சேர்த்து தோனி 70 ஒருநாள் போட்டி சதம் அடித்துள்ளார்.

புவனேஸ்வர் குமாரின் ஹாட்ரிக்

புவனேஸ்வர் குமாரின் ஹாட்ரிக்

பும்ரா இல்லாத நிலையில், புவனேஸ்வர் குமார் தான் இந்திய அணியின் பந்துவீச்சை வழி நடத்தி வருகிறார். இவர் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணி கேப்டன் ஆரோன் பின்ச் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

மூன்று முறை சரிந்த பின்ச்

மூன்று முறை சரிந்த பின்ச்

பின்ச் முதல் இரண்டு போட்டிகளிலும் பௌல்ட் அவுட் முறையில் புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். மூன்றாவது போட்டியில் பின்ச் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மூன்று போட்டிகளிலும் பின்ச் சொற்ப ரன்களில் வெளியேறி விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார்.

கோலி என்ன செய்தார்?

கோலி என்ன செய்தார்?

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் எப்படி ஒரே பந்துவீச்சாளரிடம் தன் விக்கெட்டை இழந்தாரோ, அதையே தான் கோலியும் செய்துள்ளார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ரிச்சர்ட்சனிடம் தன் விக்கெட்டை மூன்று போட்டிகளிலும் பறி கொடுத்துள்ளார் கோலி.

கோலி பேட்டிங் எப்படி?

கோலி பேட்டிங் எப்படி?

கோலி முதல் போட்டியில் 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். எனினும், இரண்டாம் போட்டியில் 104, மூன்றாம் போட்டியில் 46 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு தன் பங்கை அளித்தார்.

Story first published: Friday, January 18, 2019, 16:48 [IST]
Other articles published on Jan 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+