For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பழிக்குப் பழி.. ரிஷப் பண்ட்டை செமையாக கலாய்த்த ஆஸி. கேப்டனின் மனைவி!!

Recommended Video

ரிஷப் பண்ட்டை செமையாக கலாய்த்த ஆஸி. கேப்டனின் மனைவி- வீடியோ

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டனின் மனைவி போனி பெய்ன், இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை கலாய்த்துள்ளார்.

மெல்போர்ன் டெஸ்டில் ரிஷப் பண்ட், டிம் பெய்ன் இடையே ஆன சீண்டல்கள் எல்லை மீறின. அம்பயர் ரிஷப் பண்ட்டை எச்சரிக்கும் வரை சென்றது அந்த சீண்டல்கள்.

ரிஷப் பண்ட் சீண்டல்

ரிஷப் பண்ட் சீண்டல்

இந்த நிலையில், களத்தில் டிம் பெய்ன் எதை சொல்லி கலாய்த்தாரோ அதை நேரில் செய்து காட்டினார் ரிஷப் பண்ட். மெல்போர்ன் போட்டியில் ரிஷப் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது டிம் பெய்ன் தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

குழந்தைகளை பார்த்துக்கோ

குழந்தைகளை பார்த்துக்கோ

ரிஷப் பண்ட் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெறாததால், அந்த நேரத்தில் தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறினார். அப்போது தன் மனைவியும், தானும் சினிமாவுக்கு செல்வோம் என பயங்கரமாக பண்ட்டை கலாய்த்தார்.

எல்லை மீறிய சீண்டல்

எல்லை மீறிய சீண்டல்

பதிலுக்கு ரிஷப் பண்ட் டிம் பெய்ன் பேட்டிங் செய்த போது தற்காலிக கேப்டன் என்றும், இவருக்கு பேச மட்டும் தான் தெரியும், பேட்டிங் செய்ய வராது எனவும் எல்லை மீறி சீண்டினார்.

குழந்தைகளுடன் புகைப்படம்

குழந்தைகளுடன் புகைப்படம்

இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அளித்த விருந்தில் கலந்து கொண்ட ரிஷப் பண்ட், டிம் பெய்ன் மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்தார். டிம்மின் ஒரு குழந்தையை தூக்கிக் கொண்ட ரிஷப் பண்ட் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

கலாய்த்த டிம்மின் மனைவி

கலாய்த்த டிம்மின் மனைவி

அந்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிம் பெய்னின் மனைவி "பெஸ்ட் பேபிசிட்டர்" (குழந்தைகளை பார்த்துக் கொள்பவர்) என குறிப்பிட்டுள்ளார். கணவர் டிம் பெய்ன்னை கலாய்த்த ரிஷப் பண்ட்டை தன் பங்கிற்கு கலாய்த்துள்ளார் அவரின் மனைவி.

Story first published: Tuesday, January 1, 2019, 17:29 [IST]
Other articles published on Jan 1, 2019
English summary
India vs Australia : Tim Paine wife trolled Rishab Pant, after the banter between the Aussie captain and Rishab went nasty in third test.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+