Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ட்ராவிஸ் ஹெட்-க்கு இந்த பிரச்சனை இருக்கு.. இந்திய அணிக்கு திட்டத்தை தெளிவாக போட்டு கொடுத்த புஜாரா!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான ட்ராவிஸ் ஹெட்டை திணறடிக்கும் லைன் மற்றும் லெந்த் குறித்து சீனியர் வீரரான புஜாரா பேசி இருக்கிறார். ட்ராவிஸ் ஹெட் மிடில் மற்றும் ஆஃப் ஸ்டம்ப் இடையிலான லைனில் வீசப்படும் பந்துகளுக்கு திணறுவதாக கூறியுள்ள அவர், எதிர்பாராத நேரத்தில் ஷார்ட் பால்களை வீசவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருக்கின்றன. ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை இதுவரை பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

ind vs aus travis head pujara vs


இதனால் இம்முறை இந்திய அணியை வீழ்த்திவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். இருந்தாலும் பும்ராவின் அச்சுறுத்தலால், ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் ஆடி போயுள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா அணியை ஒற்றை வீரராக ட்ராவிஸ் ஹெட் காப்பாற்றி வருகிறார். இதுவரை ஆடிய 3 போட்டிகளில் 2 சதங்கள், ஒரு அரைசதம் உட்பட 409 ரன்களை விளாசி இருக்கிறார்.

இவரை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி வீரர்கள் திண்டாடி வருகின்றனர். அதிலும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவாகி இருக்கிறார் ட்ராவிஸ் ஹெட். இவரை வீழ்த்துவதற்கான மாற்று திட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டிய கட்டாயமும் இந்திய அணியின் பயிற்சியாளர் மோர்னே மோர்கல்-க்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ட்ராவிஸ் ஹெட்-ன் பலவீனம் குறித்து சீனியர் வீரரான புஜாரா பேசி இருக்கிறார். அதில், ட்ராவிஸ் ஹெட்-க்கு பவுலிங் செய்யும் போது, லைன் மிகவும் முக்கியம். அவருக்கு மிடில் - ஆஃப் ஸ்டம்ப் லைனிலேயே வீச வேண்டும். எந்த பக்கத்தில் இருந்து பவுலிங் செய்தாலும், மிடில் - ஆஃப் ஸ்டம்ப் லைனை மாற்றிவிடக் கூடாது. அந்த லைனில் வீசப்படும் பந்துகளுக்கு ட்ராவிஸ் ஹெட் திண்டாடுகிறார்.

அதேபோல் ட்ராவிஸ் ஹெட்-க்கு ஷார்ட் பால் பிரச்சனை இருப்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையான பந்துகளை எதிர்கொள்ள அவரிடம் சில ஷாட்ஸ் இருந்தாலும், ஃபீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்தி ஷார்ட் பாலை எதிர்பாராத நேரத்தில் வீச வேண்டும். பெரும்பாலும் ஸ்டம்ப் லைனிலேயே பவுலிங் செய்துவிட்டு, அவ்வப்போது ஷார்ட் பாலை வீச வேண்டும்.

இந்த திட்டத்தை பின்பற்றி இந்திய அணி பவுலிங் செய்ய வேண்டும். இதில் ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ட்ராவிஸ் ஹெட்டை வீழ்த்தியதும் இந்த திட்டத்தை பின்பற்றி தான். ஆனால் கடந்த 2 போட்டிகளிலும் ட்ராவிஸ் ஹெட் அதிரடியான சில ஷாட்களை விளையாடிய பின், அவரின் லைனை இந்திய பவுலர்கள் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 22, 2024, 14:40 [IST]
Other articles published on Dec 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+