Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காயத்துடன் அவதிப்பட்ட தமிழக வீரர்.. மூடி மறைத்த ஐபிஎல் அணி.. வெளியான உண்மை.. பிசிசிஐ அதிர்ச்சி

மும்பை : 2020 ஐபிஎல் தொடரின் துவக்கம் முதல் காயத்துடன் ஆடி உள்ளார் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி.

அவருக்கு காயம் இருக்கும் விவரத்தை அவரது ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பிசிசிஐ, தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் இந்திய அணி பிசியோதெரபிஸ்ட்டிடம் தெரிவித்து இருக்க வேண்டும்.

ஆனால், ஐபிஎல் தொடர் முடியும் வரை அவரை காயத்துடன் ஆட வைத்து விட்டு தற்போது அது பற்றி கூறி உள்ளது கொல்கத்தா அணி.

வருண் சக்கரவர்த்தி ஆட்டம்

வருண் சக்கரவர்த்தி ஆட்டம்

வருண் சக்கரவர்த்தி 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். 13 போட்டிகளில் 17 விக்கெட்கள் வீழ்த்தினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நம்பகமான சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்தார். அவரது பந்துவீச்சை சர்வதேச வீரர்களே சந்திக்கத் திணறினர்.

அணியில் தேர்வு

அணியில் தேர்வு

இதையடுத்து வருண் சக்கரவர்த்தி ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய உத்தேச அணியில் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அது பெரிய விஷயமாக பேசப்பட்டது. வெறும் ஐபிஎல் தொடர் செயல்பாட்டை மட்டும் வைத்து தமிழக வீரர் ஒருவர் இந்திய அணியில் இடம் பெற்றது வியப்பை அளித்தது.

காயம் உள்ளது

காயம் உள்ளது

ஆனால், தற்போது அவர் இந்திய அணியில் ஆட மாட்டார், ஆஸ்திரேலியா செல்வதே சந்தேகம் தான் என கூறப்படுகிறது. அதற்கு காரணம் அவருக்கு வலது தோள்பட்டையில் தசை நார் கிழிந்து இருப்பதாகவும், அதனால் அவரால் முழுமையாக போட்டிகளில் செயல்பட முடியாது எனவும் தெரிய வந்துள்ளது.

30 அடி வட்டம்

30 அடி வட்டம்

ஐபிஎல் தொடரில் இதே காயத்துடன் துவக்கம் முதலே அவர் பங்கேற்றுள்ளார். அவரால் பந்து வீச முடிந்தாலும், பீல்டிங்கில் பந்தை அதிக தூரம் எறிய முடியாது. அதனால், அவரை 30 யார்டு உள்வட்டத்தில் மட்டுமே பீல்டிங் செய்ய வைத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

மூடி மறைத்த கொல்கத்தா

மூடி மறைத்த கொல்கத்தா

அவருக்கு காயம் இருப்பதை அறிந்தே அவரை அனைத்து போட்டிகளிலும் ஆட வைத்துள்ளது கொல்கத்தா அணி. அதனால், அவரது காயம் பெரிதாகி உள்ளது. அனைத்து தகவல்களையும் பிசிசிஐயிடம் இருந்து மறைத்துள்ளது அந்த அணி.

பிசிசிஐ அதிர்ச்சி

பிசிசிஐ அதிர்ச்சி

அவரது காயம் பெரிதான நிலையில், ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரது காயம் குறித்த அறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. இந்த விவகாரத்தால் பிசிசிஐ அதிர்ச்சியில் உள்ளது.

அணியில் இருந்து நீக்கம்

அணியில் இருந்து நீக்கம்

காயம் இருப்பதே தெரியாமல் அவரை இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரை இந்திய அணியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அவரது காயம் குணமாக பல வாரங்கள் ஆகும் என்பதால் அவரை அணியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Monday, November 9, 2020, 16:14 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+