
வருண் சக்கரவர்த்தி
தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி கடந்த 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியால் 8.4 கோடிக்கு வாங்கப்பட்டார். அந்த சீசனில் அவரால் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீச முடிந்தது. நடப்பு சீசனில் அவர் கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ளார்.

13 விக்கெட்
கொல்கத்தா அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தி மாறி உள்ளார். 11 போட்டிகளில் அவர் 13 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். விக்கெட்கள் வீழ்த்துவது மட்டுமின்றி அவர் ஓவரில் எளிதாக ரன் எடுக்க முடிவதில்லை. அவர் "மிஸ்டரி ஸ்பின்" எனப்படும் கணிக்க முடியாத பந்துவீச்சை கொண்டுள்ளது தான் அவரது சிறப்பு.

5 விக்கெட்
டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வருண் சக்கரவர்த்தி அந்த அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி மிரட்டினார். மொத்த மிடில் ஆர்டரையும் தனி ஆளாக சாய்த்தார். இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த பந்துவீச்சு அதுதான்.

அணியில் இடம்
இதை அடுத்து இந்திய டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவரது இடத்தை பிடித்துள்ளார் வருண் சக்கரவர்த்தி. அவரை முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

குல்தீப் யாதவ்
கொல்கத்தா அணியிலும் வருண் குல்தீப் யாதவ்வை முந்தி அணியில் முக்கியத்துவம் பெற்றுள்ளார். குல்தீப் சில போட்டிகளில் நீக்கப்பட்ட போதும் வருண் சக்கரவர்த்தி அணியில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். குல்தீப் யாதவ் ஒரு காலத்தில் டி20யில் கோலோச்சிய நிலையில் அவரை வீழ்த்தியதும் வருணுக்கு வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணம்.

விமர்சனம்
வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் சிலர் அவரது உள்ளூர் போட்டி பதிவுகளை காட்டி மிக மோசமான ரெக்கார்டு கொண்டவர் என விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் தமிழக அணிக்காக மிகச் சில போட்டிகளில் தான் ஆடி உள்ளார்.

இவருக்கு வாய்ப்பா?
உள்ளூர் போட்டிகளில் பல ஆண்டுகளாக சாதித்து வரும் வீரர்களை விட ஒரு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய வீரர் சிறந்தவரா? என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சூர்யகுமார் யாதவ் போன்றோருக்கு வாய்ப்பு கிடைக்காததை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications











