For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஜய் ஷங்கருக்கு அணியில் வாய்ப்பு.. அம்பதி ராயுடு, குல்தீப், சிராஜ் நீக்கம்.. உள்ளே வந்தது யார்?

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சிராஜ்-க்கு பதில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்று இந்த போட்டியில் அறிமுகம் ஆக உள்ளார். அணியில் வேறு என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது என பார்க்கலாம்.

வீரர்கள் மாற்றம்

வீரர்கள் மாற்றம்

இந்தியா மூன்றாவது ஒருநாள் போட்டியில் வென்றால் மட்டுமே ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியும் என்ற சூழ்நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாத சில வீரர்களை நீக்கிவிட்டு, இந்த தொடரில் இன்னும் வாய்ப்பு பெறாத வீரர்களை களமிறக்கி உள்ளது.

விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு

விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு

அதன்படி, இரண்டாம் போட்டியில் ஆடிய சிராஜ், அம்பதி ராயுடு, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் போட்டியில் அதிக ரன்கள் வாரி இறைத்த சிராஜ்-க்கு பதில் அணியில் விஜய் ஷங்கர் வாய்ப்பு பெற்றுள்ளார். இவருக்கு இதுவே அறிமுக ஒருநாள் போட்டி ஆகும்.

ஆல்-ரவுண்டர் ஷங்கர்

ஆல்-ரவுண்டர் ஷங்கர்

மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் இடத்திற்கு கலீல் அஹ்மது, சிராஜ் இருவரும் அதிக ரன்கள் கொடுத்த நிலையில் மித வேகப் பந்துவீச்சாளர் விஜய் ஷங்கரரை அணியில் சேர்த்துள்ளனர். விஜய் ஷங்கர் பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என்பதால் இந்தியாவிற்கு இது கூடுதல் பலமாக அமையும்.

கேதார் ஜாதவ் வாய்ப்பு பெற்றார்

கேதார் ஜாதவ் வாய்ப்பு பெற்றார்

அம்பதி ராயுடு முதல் போட்டியில் டக் அவுட் ஆனார். இரண்டாம் போட்டியில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனை அடுத்து அவரை மூன்றாவது போட்டியில் இந்தியா களமிறக்கவில்லை. அவருக்கு பதில் கேதார் ஜாதவ் வாய்ப்பு பெற்றுள்ளார்.

சாஹல் உள்ளே

சாஹல் உள்ளே

குல்தீப் யாதவ் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் என்றாலும் முதல் இரண்டு போட்டிகளில் அவரது பந்துவீச்சு எடுபடவில்லை இதையடுத்து அவருக்கு மாற்றாக சாஹல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மூன்று மாற்றங்கள் தவிர இந்திய அணியில் மற்ற வீரர்கள் அப்படியே தொடர்கிறார்கள்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா, தவான், கோலி, கேதார் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஷமி, சாஹல்

Story first published: Friday, January 18, 2019, 8:24 [IST]
Other articles published on Jan 18, 2019
English summary
India vs Australia : Vijay Shankar debut for India at 3rd ODI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+