Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிர்ஷ்ட காற்று விஜய் ஷங்கர் பக்கமா வீசுதே!! எல்லாம் அந்த பண்டியாதான் காரணம்!

மும்பை : ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பண்டியா நீக்கப்பட்டுள்ளார். இதனால், இந்திய அணியில் அவரது இடத்தை பிடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹர்திக் பண்டியாவுக்கு முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்கு மாற்று வீரராக ஜடேஜா அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணியில் விஜய் ஷங்கர்

இந்திய அணியில் விஜய் ஷங்கர்

அதே சமயம், தற்போது அணியில் மற்றொரு வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இருக்கும் விஜய் ஷங்கருக்கு தான் பண்டியாவின் நீக்கம் அதிக அதிர்ஷ்டம் அளித்துள்ளது. ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இடை நீக்கம் செய்யப்பட்ட பண்டியாவுக்கு பதில் அணியில் இடம் பிடித்தார் விஜய் ஷங்கர்.

தொடர் வாய்ப்புகள்

தொடர் வாய்ப்புகள்

பின்னர், நியூசிலாந்து தொடரில் பேட்டிங்கில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் பொறுப்பாக ஆடும் பேட்ஸ்மேன் என பெயர் பெற்ற அவர், தொடர்ந்து இந்தியாவில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய தொடருக்கான அணியிலும் இடம் பிடித்தார்.

முன்னுரிமை யாருக்கு?

முன்னுரிமை யாருக்கு?

எனினும், போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதாக இருந்தது. ஹர்திக் பண்டியா அணியில் இருக்கும் நிலையில், அவருக்கு தான் அணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற நிலை இருந்தது.

வாய்ப்பு பெறுவார்

வாய்ப்பு பெறுவார்

ஆனால், பண்டியாவுக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் விஜய் ஷங்கர் ஆஸ்திரேலிய தொடரில் பல போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெறுவார். அப்போது, பேட்டிங், பந்துவீச்சில் தன்னை நிரூபித்தால், உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று கலக்கலாம்.

ஜடேஜா நிலை என்ன?

ஜடேஜா நிலை என்ன?

ஜடேஜா மாற்று வீரராக அறிவிக்கப்பட்டாலும், அணிக்கு கூடுதல் சுழற் பந்துவீச்சாளர் தேவை என்றால் மட்டுமே அவர் இடம் பெறுவார். எனவே, அணியின் சம பலத்தை பொறுத்தவரை பண்டியாவுக்கு மாற்று வீரர் விஜய் ஷங்கர் தான்.

இடம் பெறுவாரா?

இடம் பெறுவாரா?

கடந்த மாதம் தான் விஜய் ஷங்கர் ஒருநாள் போட்டிகளில் அறிமுக ஆனார். பின்னர் தொடர்ந்து இரண்டு முறை ஹர்திக் பண்டியாவின் நீக்கம் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றார் என்றால் அது நிச்சயம் அதிர்ஷ்டம் தான். விஜய் ஷங்கர் உலகக்கோப்பையில் இடம் பெறுவாரா?

Story first published: Thursday, February 21, 2019, 18:04 [IST]
Other articles published on Feb 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+