Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ஒருநாள் அணியில் தமிழக வீரர் விஜய் ஷங்கர்.. டிராவிட்டிடம் கற்ற வித்தையை மொத்தமா இறக்குவாரா?

மும்பை : ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பண்டியா - ராகுல் இருவரும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர்களுக்கு மாற்று வீரர்களாக விஜய் ஷங்கர் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இரு வீரர்களை தேர்வு செய்து அனுப்பியுள்ளது பிசிசிஐ.

அணியில் குழப்பம்

அணியில் குழப்பம்

இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் அடுத்ததடுத்து பங்கேற்க உள்ளது. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்தியா முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. பண்டியா - ராகுல் இருவரில், பண்டியா ஆல்-ரவுண்டர் என்பதால் அவரை அணியில் ஆட வைக்க திட்டமிட்டு இருந்த நிலையில், அவரது இடை நீக்கத்தால் அணியில் யாரை தேர்வு செய்வது சென்ற குழப்பம் ஏற்பட்டது.

விஜய் ஷங்கர் டி20 அறிமுகம்

விஜய் ஷங்கர் டி20 அறிமுகம்

தற்போது பண்டியா - ராகுல் இருவருக்கும் மாற்றாக ஷுப்மன் கில் மற்றும் விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் விஜய் ஷங்கர் ஏற்கனவே, இந்திய டி20 அணியில் ஆடியவர். நிதாஸ் ட்ராபியில் பங்கேற்ற அவர், வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 19 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே அடித்து இந்திய அணியின் சேஸிங்கில் அழுத்தத்தை அதிகரித்தார்.

கேலி, கிண்டல்

கேலி, கிண்டல்

அந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற செய்தார் என்றாலும், விஜய் ஷங்கர் ரன் அடிக்க முடியாமல் திணறிய காட்சிகள் இணையத்தில் கடுமையான கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானது.

களம் இறங்குவாரா?

களம் இறங்குவாரா?

அதன் பின் டி20 அணியில் அடுத்த வாய்ப்புகள் கிடைக்காத விஜய் ஷங்கர் தற்போது இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தன் அறிமுக ஒருநாள் போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பு ஏற்படுமா என்பது தெரியவில்லை.

டிராவிட் பயிற்சி

டிராவிட் பயிற்சி

விஜய் ஷங்கர் நிதாஸ் ட்ராபிக்கு பின் மனதளவில் சோர்ந்து இருந்த நிலையில், இந்தியா ஏ அணியில் டிராவிட்டின் பயிற்சியில் அவர் பட்டை தீட்டப்பட்டு நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் 188 ரன்கள் அடித்தார்.

உலகக்கோப்பை வாய்ப்பு

உலகக்கோப்பை வாய்ப்பு

விஜய் ஷங்கர், பண்டியா போலவே மித வேகப்பந்து ஆல்-ரவுண்டராக இருப்பார் என்பதால், பண்டியாவுக்கு சரியான மாற்றாக இருப்பார் என கூறப்படுகிறது. மேலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தன் ஆல்-ரவுண்டர் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினால் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைக்கலாம்.

Story first published: Monday, January 14, 2019, 14:05 [IST]
Other articles published on Jan 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+