Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. டி20யில் விஜய் ஷங்கர் இடத்தை பிடித்த உமேஷ் யாதவ்.. நம்ம விஜய்க்கு இனி வாய்ப்பே கிடைக்காதா?

விசாகப்பட்டினம் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டி20 போட்டியில் விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்படவில்லை.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் தொடரில் ஆடி வருகிறது.

அணியில் மாற்றம்

அணியில் மாற்றம்

முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் விஜய் ஷங்கர், ஷிகர் தவான் ஆகியோர் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் ராகுல் அணியில் இடம் பெற்றனர்.

கோலி விளக்கம்

கோலி விளக்கம்

இந்த மாற்றம் குறித்து டாஸ் போடும் போது பேசிய கோலி, உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் நிலையில் உள்ள வீரர்கள் அனைவருக்கும் விளையாட வாய்ப்பு தரும் வகையில் உமேஷ் யாதவ், ராகுல் அணியில் சேர்க்கப்பட்டதாக கூறினார்.

விஜய் ஷங்கர் காலியா?

விஜய் ஷங்கர் காலியா?

இதனால், விஜய் ஷங்கருக்கு உலகக்கோப்பை வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் ஷங்கர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் இரண்டிற்குமான உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளார்.

இப்படி இருக்கலாம்

இப்படி இருக்கலாம்

அதே சமயம், உமேஷ் யாதவ் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றுள்ளார். எனவே, உமேஷ் யாதவுக்கு டி20 தொடரிலும், விஜய் ஷங்கருக்கு ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருக்கலாம்.

உமேஷ் யாதவ் நிலை

உமேஷ் யாதவ் நிலை

உமேஷ் யாதவ்வை பொறுத்தவரை கடந்த ஆண்டு பெற்ற பல வாய்ப்புகளில் சில முறை மட்டுமே அவர் சிறப்பாக பந்து வீசியுள்ளார். எனவே, அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவது கடினம் என கூறப்பட்டு வருகிறது.

மாற்று வீரர் விஜய்

மாற்று வீரர் விஜய்

விஜய் ஷங்கர், ஹர்திக் பண்டியாவுக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தொடருக்கான அணியில் இடம் பிடித்தார். பண்டியா மீண்டும் அணியில் வந்த போது விஜய்க்கு ஆஸ்திரேலிய தொடரில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காது, அவர் மாற்று வீரராக வேண்டுமானால் அணியில் இருக்கலாம் என்றே கூறப்பட்டு வந்தது.

ஜாக்பாட் அடித்தது

ஜாக்பாட் அடித்தது

தற்போது ஹர்திக் பண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், விஜய் ஷங்கருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்பதே உண்மை. டி20 தொடரில் வாய்ப்பு பெறாவிட்டாலும், விஜய் ஒருநாள் தொடரில் ஆடும் வாய்ப்பை பெறுவார் என உறுதியாக நம்பலாம்.

Story first published: Sunday, February 24, 2019, 20:12 [IST]
Other articles published on Feb 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+