Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை மரியாதையா நடத்தணும்.. இப்படியா கேலி பண்றது? ஆஸி. ரசிகர்களுக்கு பாண்டிங் கண்டனம்

சிட்னி : சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கோலி பேட்டிங் செய்ய வந்த போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் "பூ" என சப்தமிட்டு அவரை அவமரியாதை செய்தனர்.

இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமும் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கும் கண்டித்துள்ளனர். கோலிக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோஷமிடுவது அல்லது திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது புதிதல்ல.

ஆஸ்திரேலிய ரசிகர்கள் அட்டகாசம்

ஆஸ்திரேலிய ரசிகர்கள் அட்டகாசம்

மேற்கத்திய நாடுகளில் ஒரு பிரபலத்தை கேலி செய்ய, அவமானப்படுத்த "பூ" என் சப்தமிடுவது வழக்கம். கோலி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்றது முதல் பல்வேறு சமயங்களில் அவரை இப்படி சப்தமிட்டு அவமானப்படுத்தி வருகின்றனர் சில ஆஸ்திரேலிய ரசிகர்கள்.

ரிக்கி பாண்டிங் கண்டனம்

ரிக்கி பாண்டிங் கண்டனம்

பெர்த், மெல்போர்ன் ஆகிய மைதானங்களை தொடர்ந்து சிட்னி மைதானத்திலும் கோலிக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர் சில ரசிகர்கள். இதைக் கண்டு ஏமாற்றமடைந்துள்ள ரிக்கி பாண்டிங், இந்த செயலை கண்டித்துள்ளார்.

மரியாதையற்ற செயல்

மரியாதையற்ற செயல்

இது மிகவும் மரியாதையற்ற செயல் என கூறியுள்ளார் பாண்டிங். மேலும், இதை பெர்த் டெஸ்டில் தான் கூறியதை நினைவு கூர்ந்தார். அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார் பாண்டிங்.

ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில், "இதை பார்க்க நான் விரும்பவில்லை. நம் ரசிகர்கள் விளையாட்டை ஆதரிக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். நம் நாட்டுக்கு கிரிக்கெட் ஆட வருபவர்களை மதிக்க வேண்டும்" என கூறினார்.

Story first published: Friday, January 4, 2019, 19:16 [IST]
Other articles published on Jan 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+