Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்ட நாயகன் கோலி.. முன்னாள் கேப்டன் கங்குலியை பின் தள்ளி புதிய சாதனை!

நாக்பூர் : விராட் கோலி நாக்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார். இந்த சதம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

மேலும், இந்த போட்டியில் கங்குலியின் சாதனை ஒன்றையும் கோலி முறியடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

ஆட்ட நாயகன் விருது

ஆட்ட நாயகன் விருது

இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி அடித்த சதம் காரணமாக ஆட்ட நாயகன் விருது வாங்கினார். இது விராட் கோலி வாங்கும் 32வது ஆட்ட நாயகன் விருதாகும். இதன் மூலம் சௌரவ் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார் கோலி.

எங்க நாட்டு காவலர்களுக்கு கிரிக்கெட்னா ரொம்ப பிடிக்கும்.. ஹெய்டனுக்கு நக்கல் பதில் சொன்ன கவாஸ்கர்!

கங்குலியை முந்தினார்

கங்குலியை முந்தினார்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கங்குலி இதுவரை 31 ஆட்ட நாயகன் விருது வாங்கியுள்ளார். தற்போது கோலி 32 விருதுகள் வாங்கி, முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை இந்த பட்டியலில் பின் தள்ளியுள்ளார்.

சச்சின் முதல் இடம்

சச்சின் முதல் இடம்

இந்திய அளவில் தற்போது சச்சின் 62 ஆட்ட நாயகன் விருது வாங்கி இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 32 விருதுகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

அடுத்த இடங்களில் யார்?

அடுத்த இடங்களில் யார்?

மூன்றாம் இடத்தில் கங்குலி - 31, நான்காம் இடத்தில் யுவராஜ் சிங் - 27, ஐந்தாம் இடத்தில் சேவாக் - 23, ஆறாம் இடத்தில் தோனி - 20 விருதுகள் வென்று அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

மற்றொரு சாதனை

மற்றொரு சாதனை

நாக்பூரில் போட்டியில் தன் 40வது சதம் அடித்த கோலி, மூன்று அணிகளுக்கு எதிராக ஏழு அல்லது அதற்கு மேல் சதம் அடித்து சாதனை செய்தார். இலங்கை அணிக்கு எதிராக 8, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார் கோலி.

Story first published: Thursday, March 7, 2019, 13:13 [IST]
Other articles published on Mar 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+