Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி அனுப்பிய அந்த மெயில்.. பதறிய பிசிசிஐ.. பெரிய சிக்கலில் இந்திய அணி.. கசிந்த தகவல்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய தொடருக்கு புறப்படும் முன் பிசிசிஐக்கு ஒரு மெயில் அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.

ஆம், மூன்று டெஸ்ட் போட்டிகளில் தன்னால் பங்கேற்க முடியாது என அவர் கூறி இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இதை பிசிசிஐ எதிர்பார்க்கவில்லை. முன்னதாக கோலி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடமாட்டார் என தகவல் வெளியான நிலையில், இது இந்திய டெஸ்ட் அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 27 முதல் ஜனவரி இரண்டாம் வாரம் வரை நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணி விராட் கோலி தலைமையில் நவம்பர் 11 அன்று கிளம்ப உள்ளது.

டெஸ்ட் தொடர் முக்கியம்

டெஸ்ட் தொடர் முக்கியம்

இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் தான் முக்கியம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடக்க உள்ள அந்த தொடரில் வெற்றி பெற்று புள்ளிகளை பெற இரு அணிகளும் போராடும். இதில் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

கோலி விடுப்பு

கோலி விடுப்பு

இந்த நிலையில், தான் டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஆன கேப்டன் விராட் கோலி மூன்று போட்டிகளில் இருந்து விடுப்பு எடுக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவர் பிசிசிஐக்கு தகவல் கூறி இருக்கிறார்.

மெயில் அனுப்பி உள்ளார்

மெயில் அனுப்பி உள்ளார்

விராட் கோலி, பிசிசிஐக்கு அனுப்பிய மெயிலில் தான் டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் பங்கேற்காமல் போக வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளார். அவரது மனைவிக்கு ஜனவரி முதல் வாரத்தில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

குழப்பத்தில் பிசிசிஐ

குழப்பத்தில் பிசிசிஐ

விராட் கோலி போன்ற முக்கிய வீரர் விலகும் நிலையில் அணியின் சமநிலையை எப்படி சீராக வைத்துக் கொள்வது? யாரை மாற்று வீரராக ஆட வைப்பது என கடும் குழப்பத்தில் உள்ளது பிசிசிஐ. அணித் தேர்வின் போது இந்த விஷயம் பிசிசிஐக்கு தெரியாதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ரோஹித் சர்மா இல்லை

ரோஹித் சர்மா இல்லை

ஏற்கனவே, ரோஹித் சர்மா டெஸ்ட் அணி உட்பட மூன்று அணிகளிலும் சேர்க்கப்படவில்லை. அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். ஆனாலும் அவர் அணியில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறார். கோலி இல்லாத நிலையில், ரோஹித் சர்மாவை அணியில் சேர்க்க அதிக வாய்ப்பு உள்ளது.

பேட்டிங் பலவீனம்

பேட்டிங் பலவீனம்

இந்திய டெஸ்ட் அணியின் பலம் விராட் கோலி தான். மற்ற வீரர்கள் சொதப்பிய டெஸ்ட் தொடர்களில் கூட அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் உலகின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆகவும் வலம் வருகிறார். அவர் இல்லாத அணி நிச்சயம் பேட்டிங்கில் பலவீனமாகவே இருக்கும்.

கேப்டன் யார்?

கேப்டன் யார்?

விராட் கோலி இல்லாத நிலையில், அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அணியின் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே, கோலி இல்லாத போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அதிகாரிகள் கூறினர்.

Story first published: Monday, November 9, 2020, 16:41 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+