Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி பாதியில் விலகுவார்.. ஆஸி. டெஸ்ட் தொடரில் இதுதான் நடக்கும்.. பரபர தகவல்.. சிக்கலில் இந்திய அணி!

மும்பை : விராட் கோலி ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு முழு தொடரிலும் பங்கேற்க உள்ளதாகவே அனைவரும் எண்ணிய நிலையில், அதற்கு மாறான தகவல் வெளியாகி உள்ளது.

அவர் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாதியில் அணியில் இருந்து விலகுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால், இந்திய டெஸ்ட் அணியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

2020 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கே ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. ஜனவரி வரை இந்திய அணி அங்கேயே இருந்து தொடரில் பங்கேற்கும்.

முக்கியமான டெஸ்ட் தொடர்

முக்கியமான டெஸ்ட் தொடர்

இதில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தான் முக்கியமானது. அந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கம் என்பதால் அதில் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெற வேண்டும். அதனால், இந்திய அணி டெஸ்ட் தொடரில் முழு பலத்துடன் தான் களமிறங்கும்.

கோலி விலகல்

கோலி விலகல்

இந்த நிலையில், இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் தொடரில் பாதியில் விலகுவார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், இதற்கு வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது.

காரணம் இதுதான்

காரணம் இதுதான்

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கார்ப்பமாக இருக்கிறார். அவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் குழந்தை பிறக்கக் கூடும் என கூறப்படுகிறது. தந்தையாக உள்ள கோலி அந்த சமயத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என விரும்புவார் என்பதால் அவர் பாதியில் விலகுவார் என கூறப்படுகிறது.

ஜனவரி மாதம்

ஜனவரி மாதம்

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அது முடிந்த உடன் அடுத்த இரண்டு போட்டிகள் ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் நடைபெறும். இந்த கடைசி இரு போட்டிகளில் தான் கோலி பங்கேற்கப் போவதில்லை என கூறப்படுகிறது.

சிக்கல்

சிக்கல்

சாதாரணமாக இது போன்ற சூழ்நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டு கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன் அணிக்கு திரும்ப முடியும். ஆனால், இப்போது குவாரன்டைன் விதிகள் இருப்பதால் கோலி ஒரு வாரத்தில் அணிக்கு திரும்ப முடியாது.

மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

விராட் கோலி விலகினால் இந்திய அணியில் மாற்று வீரராக யாரை ஆட வைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. கேஎல் ராகுல் மாற்று துவக்க வீரராக மட்டுமே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் மிடில் ஆர்டரில் கோலி இடத்தில் ஆடக் கூடும்.

Story first published: Saturday, November 7, 2020, 21:18 [IST]
Other articles published on Nov 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+