
விமர்சனம்
இந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் சிலர் விராட் கோலி அணியை கை விட்டு விட்டதாக நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறி வருகின்றனர். சிலர் ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

ஐபிஎல் முடிந்த உடன்..
2020 ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில், இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா தொடருக்கு செல்ல உள்ளனர். அங்கே ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இதில் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17 அன்று துவங்க உள்ளது.

முக்கியமான தொடர்
இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதி என்பதால் இதில் வெற்றி பெற்று புள்ளிகள் பெறுவது மிகவும் முக்கியம். இந்த தொடருக்கு இந்திய அணி தன் முழு பலத்துடன் களமிறங்க வேண்டும். மேலும், கடந்த முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி இந்த முறை அதை தக்க வைக்க வேண்டும்.

பழி தீர்க்க காத்திருக்கும் ஆஸி.
கடந்த முறை ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை இந்தியா புரட்டி எடுத்து வெற்றி பெற்று இருந்தது. அந்த தோல்விக்கு பழி தீர்க்க ஆஸ்திரேலியா காத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தான் விராட் கோலி விவகாரம் கிளம்பி உள்ளது.

கோலி விடுப்பு
விராட் கோலி இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டுமே பங்கு பெறுவார். அடுத்த மூன்று போட்டிகளில் இருந்து அவர் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். அவரது மனைவிக்கு ஜனவரி மாத துவக்கத்தில் குழந்தை பிறக்க உள்ளதால் அவர் விடுப்பு எடுத்து இருக்கிறார்.

முன்னாள் வீரர்கள் கருத்து
இது பற்றி முன்னாள் வீரர்கள் சிலர் கூறுகையில், விராட் கோலி இந்திய அணிகை கை விட்டுள்ளார். அவர் இல்லாத இந்திய அணி நிச்சயம் ஆஸ்திரேலியாவில் தடுமாறும் என கூறி உள்ளனர். அதே சமயம், சிலர் கோலியின் முடிவை ஆதரித்து உள்ளனர். குடும்பமும் முக்கியம் தான் என கூறி உள்ளனர்.

தோனி விடுப்பு எடுக்கவில்லை
ஆனால், ரசிகர்கள் இதை அப்படி பார்க்கவில்லை. அவர்கள் தோனியுடன், கோலியை ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளனர். கோலி 2015 உலகக்கோப்பை தொடரின் இடையே ஸிவா பிறந்த போது விடுப்பு எடுத்துக் கொள்ளவில்லை. அதை சுட்டிக் காட்டி கோலிக்கு அணி முக்கியம் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கை தான் முக்கியம் என விமர்சனம் செய்துள்ளனர்.

இந்திய அணியில் குழப்பம்
விராட் கோலி ஆஸ்திரேலிய தொடருக்கான அணித் தேர்வுக்கு பின் தற்போது விடுப்பு கேட்டுள்ளதால் இந்திய அணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. யாரை கோலிக்கு பதில் ஆட வைப்பது? அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுவாரா? அல்லது வேறு யாரையும் பிசிசிஐ தேர்வு செய்யுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ரோஹித் ஆடுவாரா?
முன்னதாக ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. அவர் தற்போது டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் போட்டிகளில் பங்கேற்பாரா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.


Click it and Unblock the Notifications