Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா, ஷமி எல்லாம் கிடையாது.. வாய்ப்பை தட்டித் தூக்கும் தமிழக வீரர்.. கோலி திட்டம்.. செம ட்விஸ்ட்!

சிட்னி : இந்திய அணியில் முதன் முறையாக இடம் பெற்று இருக்கிறார் தமிழக வீரர் நடராஜன்.

டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் அவருக்கு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்காது என்றே முதலில் கருதப்பட்டது.

ஆனால், அவரை போட்டிகளில் ஆட வைக்கவே கேப்டன் விராட் கோலி தேர்வு செய்து இருக்கக் கூடும் என ஒரு தகவல் வலம் வருகிறது.

2020 ஐபிஎல் தந்த வீரர்

2020 ஐபிஎல் தந்த வீரர்

2020 ஐபிஎல் தொடரின் சிறந்த கண்டுபிடிப்பு என்றால் அது தமிழகத்தை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் தான். அவர் கடந்த மூன்று வருடங்களாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று வந்தாலும் சரியான வாய்ப்பின்றி தவித்து வந்தார்.

யார்க்கர் மன்னன்

யார்க்கர் மன்னன்

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் அவருக்கு முதல் போட்டியில் இருந்து தொடர்ந்து வாய்ப்பு அளித்தார். தன் யார்க்கர் பந்துவீச்சு ஒன்றை வைத்தே அனைத்து அணிகளையும் மிரட்டினார் நடராஜன். சிக்கனமாக பந்து வீசி அசத்தினார்.

அந்த ஒரு ஓவர்

அந்த ஒரு ஓவர்

அதில் உச்சகட்டமாக அமைந்தது ஐபிஎல் தொடரில் அவரது கடைசி ஓவர். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான பிளே-ஆஃப் போட்டியில் கடைசி ஓவரை வீசிய அவர் ஆறு பந்துகளையும் துல்லிய யார்க்கராக வீசி மிரட்டினார். யாராலும் ஆறு பந்துகளையும் எளிதாக யார்க்கராக வீசி விட முடியாது.

மாற்று வீரருக்கு அணியில் இடம்

மாற்று வீரருக்கு அணியில் இடம்

அந்த ஒரு ஓவரால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன் ஆஸ்திரேலிய தொடரில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டு இருந்த அவர், அதிரடியாக டி20அணியில் காயம் அடைந்த வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக சேர்க்கப்பட்டார்.

ஆடுவாரா?

ஆடுவாரா?

டி20 அணியில் இடம் கிடைத்தாலும் அவர் போட்டிகளில் பங்கேற்பது கடினம் என்றே கருதப்பட்டது. இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி, தீபக் சாஹர், நவ்தீப் சைனி என ஏற்கனவே தங்களை நிரூபித்த வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.

கோலி திட்டம்?

கோலி திட்டம்?

ஆனால், தற்போது நடராஜன் போட்டிகளில் ஆடுவார் என்கிறார்கள். அதற்குத் தான் அவரை விராட் கோலி அணியில் தேர்வு செய்தார் என கூறப்படுகிறது. பும்ரா, முகமது ஷமி அணியில் இருந்தாலும், அவர்களை தாண்டி நடராஜனுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படுமா?

வீரர்களுக்கு ஓய்வு

வீரர்களுக்கு ஓய்வு

டி20 தொடருக்கு பின் இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. அந்த தொடர் மிகவும் முக்கியமானது. அதில் பும்ரா, முகமது ஷமி அனைத்து போட்டிகளிலும் ஆட வேண்டும் என்பதால் டி20 தொடரில் அவர்களுக்கு ஓய்வு அளிக்க கோலி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

நடராஜனுக்கு வாய்ப்பு

நடராஜனுக்கு வாய்ப்பு

இந்த நிலையில் நவ்தீப் சைனி, தீபக் சாஹர் மற்று நடராஜன் மட்டுமே அணியில் உள்ள பிற வேகப் பந்துவீச்சாளர்கள். ஷமி, பும்ரா ஒரீரு போட்டிகளில் ஆடினாலும் அவர்கள் ஓய்வு பெறும் போட்டிகளில்இவர்கள் மூவரும் ஆட வாய்ப்பு கிடைக்கும்.

முதல் படி

முதல் படி

நடராஜன் எப்படியும் ஒரீரு போட்டிகளில் ஆடி விடுவார். இது அவரது கேரியரின் முதல் படி மட்டுமே. தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் அவர் சிறப்பாக பந்து வீசி விக்கெட் வேட்டை நடத்தினால் அவருக்கு தொடர்ந்து டி20அணியிலும், ஒருநாள் அணியிலும் கூட வாய்ப்பு கிடைக்கும்,

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

நடராஜன் தற்போது வலைப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார். அவரை கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கவனித்து வருகிறார்கள். அவரை போட்டிகளில் ஆட வைக்கும் முன் அவர்கள் பரிசோதித்து வருவதாக இதை கருதலாம்.

Story first published: Monday, November 16, 2020, 19:07 [IST]
Other articles published on Nov 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+