For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலகக்கோப்பை: இன்று இந்தியா vs ஆஸ்திரேலியா பயிற்சி போட்டி.. எங்கு? எப்படி? பார்ப்பது - விவரம்

பிரிஸ்பேன்: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதல் பயிற்சி போட்டி இன்று நடைபெறவுள்ளது.

கிரிக்கெட் திருவிழாவான டி20 உலகக்கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று முதல் சுற்று போட்டிகள் தொடங்கிய நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக்டோபர் 22ம் தேதியன்று தான் தொடங்குகிறது.

 போட்டி எப்போது?

போட்டி எப்போது?

எனவே அதற்கான பயிற்சியாக இன்று இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பிரிஸ்பேனில் உள்ள காப்பா மைதானத்தில் 9.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. உள்நாட்டு அணிகளுடனான பயிற்சி போட்டியில் விராட் கோலி, சூர்யகுமார் போன்றோருக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில் இந்த போட்டியில் இந்தியா தனது முழு பலத்துடன் களமிறங்கும் எனத் தெரிகிறது.

எப்படி காண்பது?

எப்படி காண்பது?

இந்நிலையில் இந்த பயிற்சி போட்டியை எங்கு? எப்படி பார்க்கலாம் என்பதை பார்க்கலாம். மற்ற லீக் போட்டிகளை போன்றே இந்த பயிற்சி போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய நேரப்படி காலை 9 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 1ல் நேரலையாக ரசிகர்கள் காணலாம். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா 4 மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

ஆன்லைன் ஏற்பாடு

ஆன்லைன் ஏற்பாடு

பயிற்சி போட்டியை ஆன்லைனில் பார்ப்பதற்கும் கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் போட்டியை கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற உள்நாட்டு அணியுடனான பயிற்சி போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படாததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடும் பயிற்சி

கடும் பயிற்சி

ஆஸ்திரேலிய களத்தின் வேகத்தையும், பவுன்ஸையும் சமாளிக்க இந்திய வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை சமாளித்து வெற்றி பெற்றுவிட்டால், உலகக்கோப்பையில் எப்படிபட்ட அணியையும் வீழ்த்திவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, October 17, 2022, 9:00 [IST]
Other articles published on Oct 17, 2022
English summary
India vs Australia warmup match for T20 world cup 2022 begin today, When and where to watch the IND vs AUS Live
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+