Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி எவ்வளவோ செஞ்சுருக்காரு.. அவருக்கு திருப்பி செய்யுமா இந்திய அணி?

ராஞ்சி : தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

இந்த ஒருநாள் போட்டியில் வென்று மூத்த வீரர் தோனிக்கு உரிய மரியாதையை அளிக்குமா இந்திய அணி?

கடைசியாக ஆடவுள்ள போட்டி

கடைசி போட்டி

கடைசி போட்டி

தோனி உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டி தான் தோனி தன் சொந்த ஊரில் கடைசியாக ஆடவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டி.

அணியை வளர்த்த கேப்டன் தோனி

அணியை வளர்த்த கேப்டன் தோனி

இந்திய அணிக்கு தோனி எத்தனையோ வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். கேப்டனாக உலகக்கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அணியில் பல வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமையை வளர்த்துள்ளார்.

சிறந்த மரியாதை

சிறந்த மரியாதை

அப்படிப்பட்ட மூத்த வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணி சார்பாக செய்யும் சிறந்த மரியாதை மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது தான்.

தொடரில் முன்னிலை

தொடரில் முன்னிலை

இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணியை பின் தள்ளி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. ஆனால், முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி பெரிய வெற்றிகளை பெறவில்லை. இரண்டு போட்டிகளிலுமே, இந்திய அணி கடைசி சில ஓவர்கள் வரை சென்று தான் வெற்றி பெற்றது.

சாதனை வெற்றி வேண்டும்

சாதனை வெற்றி வேண்டும்

எனவே, ராஞ்சி போட்டியில் இந்திய அணி சாதனை வெற்றி பெரும் பட்சத்தில் அது மறக்க முடியாத போட்டியாக அமையும். மூத்த வீரர் தோனிக்கு பெருமை சேர்ப்பதாகவும் இருக்கும். விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி என்ன செய்யப் போகிறது?

Story first published: Thursday, March 7, 2019, 16:33 [IST]
Other articles published on Mar 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+