Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது ஒருநாள் போட்டியில் விஜய் ஷங்கர், ராயுடுவை தூக்கிட்டு இவங்க 2 பேருக்கும் இடம் கொடுங்க!

நாக்பூர் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் விஜய் ஷங்கர், அம்பதி ராயுடு சரியாக செயல்படவில்லை.

இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். உலகக்கோப்பை அணிக்கான முன்னோட்டம் என கூறப்படும் ஆஸ்திரேலிய தொடரில், இரண்டாம் போட்டிக்கான இந்திய அணியில் இவர்கள் இருவருக்கும் பதில் வேறு இரு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது.

அதிக ரன்கள் கொடுத்தார்

அதிக ரன்கள் கொடுத்தார்

விஜய் ஷங்கர் முதல் போட்டியில் பேட்டிங் செய்யவில்லை. அதற்கான வாய்ப்பு அவருக்கு ஏற்படவில்லை. ஆனால், பந்துவீச அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பில் சொதப்பிய விஜய், 3 ஓவர்கள் பந்து வீசி 22 ரன்கள் கொடுத்தார்.

நிரூபிக்க தவறினார்

நிரூபிக்க தவறினார்

இதனால், கேப்டன் கோலி அவருக்கு மீண்டும் பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை. விஜய் ஷங்கரை ஆல்-ரவுண்டர் என்ற காரணத்திற்காகவே அணியில் தேர்வு செய்யும் நிலையில், அவர் அதற்குரிய வகையில் தன்னை நிரூபிக்க தவறி வருகிறார்.

நியூசிலாந்து தொடரில்

நியூசிலாந்து தொடரில்

நியூசிலாந்து தொடரில் பேட்டிங் செய்த போது பொறுப்பாக ஆடினார். இது மட்டுமே விஜய் ஷங்கருக்கு இப்போது இருக்கும் நல்ல பெயர். இதை வைத்து தான் ஆஸ்திரேலிய டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இடம் பிடித்தார்.

வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்பு கிடைக்குமா?

ஹர்திக் பண்டியாவிற்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு மாற்றாக களம் இறக்கப்பட்டார் விஜய். ஆனால், கிடைத்த வாய்ப்பில் சொதப்பிய விஜய் ஷங்கருக்கு இரண்டாம் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.

ராயுடுவும் சொதப்பல்

ராயுடுவும் சொதப்பல்

அதே போல, நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட அம்பதி ராயுடு, முதல் போட்டியில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே, சில ரசிகர்கள் ராயுடுவை நீக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இவர்களை மாற்றுங்க!

இவர்களை மாற்றுங்க!

அம்பதி ராயுடுவுக்கு பதில் டி20 தொடரில் கலக்கிய துவக்க வீரர் ராகுலும், விஜய் ஷங்கருக்கு மாற்றாக ரிஷப் பண்ட்டும் இரண்டாவது போட்டியில் களமிறங்க வேண்டும் என சிலர் கூறியுள்ளனர். ஆனால், இது நடக்குமா என்பது தெரியவில்லை.

பண்ட், ராகுல் இடம் பெறுவார்களா?

பண்ட், ராகுல் இடம் பெறுவார்களா?

காரணம், துவக்க வீரர் ராகுல் நான்காம் இடத்தில் இறங்கினால் நிதானமாக பேட்டிங் செய்ய வேண்டி வரலாம். அது அவரது பேட்டிங் முறைக்கு எடுபடுமா? என்பது தெரியவில்லை. அதே போல கூடுதல் பந்துவீச்சாளர் விஜய் ஷங்கரை நீக்கினால், கோலி நிச்சயம் மற்றொரு ஆல்-ரவுண்டர் அல்லது பந்துவீச்சாளரை தான் தேர்வு செய்வார்.

Story first published: Monday, March 4, 2019, 17:41 [IST]
Other articles published on Mar 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+