For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரும் சரியில்லை.. இவரும் சரியில்லை.. அப்ப விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா? #IndVAus

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் விஜய் ஷங்கருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கு காரணம், இந்திய அணியில் சரியான மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் அமையவில்லை. மெல்போர்ன்--இல் நடைபெறும் ஒருநாள் போட்டியில் யாருக்கு வாய்ப்பு என்பது குறித்து பார்க்கலாம்.

மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர்

மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர்

இந்திய அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் வென்றால் மட்டுமே 1-1 என சம நிலையில் இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியும். முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது, மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் மட்டுமே.

கலீல் - சிராஜ் குழப்பம்

கலீல் - சிராஜ் குழப்பம்

முதல் போட்டியில் 8 ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்த கலீல் அஹ்மதுவை இரண்டாவது போட்டியில் நீக்கிவிட்டு புதிய வீரரான சிராஜ்-க்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவரும் அதிக ரன்கள் கொடுத்து அணியை சோதித்தார்.

மூன்று சுழல்

மூன்று சுழல்

கட்டுக்கோப்பான மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் தேவையை இந்தியா எப்படி சமாளிக்கும் என்பதே மூன்றாவது போட்டியில் முக்கிய அம்சமாக இருக்கும் என கருதப்படுகிறது. மெல்போர்ன் மைதானம் சுழலுக்கும் ஒத்துழைக்கும் என்பதால் இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் ஆடவேண்டும் என கூறினார் கவாஸ்கர்.

விஜய் ஷங்கர் வருவாரா?

விஜய் ஷங்கர் வருவாரா?

ஆனால், மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் என்பது சில சமயம் பாதகமான அம்சமாக மாறவும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனையை சமாளிக்க இந்தியா சிராஜ், கலீல் இருவரையும் நீக்கி விட்டு மிதவேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான விஜய் ஷங்கர் அணியில் இடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

கலீல் அஹ்மதுக்கும் வாய்ப்பு உண்டு

கலீல் அஹ்மதுக்கும் வாய்ப்பு உண்டு

தேவையில்லாத புதிய முயற்சிகளை மேற்கொள்ள விரும்பாவிட்டால் இந்தியா கலீல் அஹ்மதுவை அணியில் சேர்த்து மூன்றாவது போட்டியை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.

அம்பதி ராயுடு பேட்டிங்

அம்பதி ராயுடு பேட்டிங்

பேட்டிங்கில் இந்தியாவில் அம்பதி ராயுடு தவிர அனைவரும் நம்பிக்கை அளிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அம்பதி ராயுடு இரண்டு போட்டிகளில் கோட்டை விட்டாலும், மூன்றாவது போட்டியில் இடம் பிடிப்பார் என்றே தெரிகிறது.

Story first published: Thursday, January 17, 2019, 18:53 [IST]
Other articles published on Jan 17, 2019
English summary
India vs Australia : Will Vijay Shankar get a chance in 3rd ODI?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+