Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20யில் சரியா வாய்ப்பு தரலை.. ஒருநாள் தொடர்-ல கொடுப்பீங்களா? வெயிட்டிங்கில் விஜய் ஷங்கர்!

ஹைதராபாத் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஒருநாள் தொடரில் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த டி20 தொடரில் இந்தியா 0-2 என தோல்வி அடைந்த நிலையில், அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

பண்டியா - விஜய் நிலை

பண்டியா - விஜய் நிலை

இந்த தொடருக்கான அணியில் முதலில் ஹர்திக் பண்டியா முக்கிய வீரராக அனைத்து போட்டிகளிலும் இடம் பெறுவார் என கூறப்பட்டு வந்தது. அதே போல, விஜய் ஷங்கர் மாற்று வீரராக அணியில் இருப்பார் என்றும், அவருக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது என்றும் கருதப்பட்டது.

ஹர்திக் பண்டியா காயம்

ஹர்திக் பண்டியா காயம்

ஆனால், கடந்த சில வாரங்கள் முன்பு ஹர்திக் பண்டியாவிற்கு முதுகில் உள்ள காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை எனக் கூறி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

இடம் உறுதியா?

இடம் உறுதியா?

இதனால், விஜய் ஷங்கர் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் களமிறங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனினும், இது உறுதியான முடிவா என்பது தெரியவில்லை. உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா பல வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்திப் பார்த்து வருகிறது.

பரிசோதனை தொடருமா?

பரிசோதனை தொடருமா?

அது ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரிலும் நீடிக்குமா? என்ற கேள்வி உள்ளது. ஒருவேளை அணியில் பல பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்தால், அதில் விஜய் ஷங்கரை அணியில் ஆட வைப்பார்களா? என்பது தெரியவில்லை.

2 விக்கெட் வீழ்த்தினார்

2 விக்கெட் வீழ்த்தினார்

விஜய் ஷங்கர் ஆல்-ரவுண்டர் என்ற அந்தஸ்தில் அணியில் இருக்கிறார். ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்கி அதிலும் பந்து வீச மட்டுமே வாய்ப்பு பெற்றார். அதில் 2 விக்கெட் வீழ்த்தினார்.

வாய்ப்பு பெறுவரா?

வாய்ப்பு பெறுவரா?

உண்மையில், விஜய் ஷங்கர் இன்னும் தன்னை நிரூபிக்கும் அளவுக்கு சரியான வாய்ப்புகளை பெறவில்லை. அவருக்கு ஒருநாள் தொடரில் அதிக போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு வாய்ப்பு தர வேண்டும்.

அணியில் போட்டி

அணியில் போட்டி

ஆனால், விஜய் ஷங்கர் போலவே, சுழற் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் கேதார் ஜாதவ் உலகக்கோப்பை அணியில் தங்கள் இடம் உறுதியா என தெரியாத நிலையில் உள்ளனர். விஜய் ஷங்கர் இவர்கள் இருவருடனும் போட்டி போட வேண்டிய நிலை ஏற்படலாம். கூடுதல் வேகப் பந்துவீச்சாளர் தேவை என்றால் நிச்சயம் விஜய் ஷங்கர் வாய்ப்பு பெறுவது உறுதி.

Story first published: Friday, March 1, 2019, 13:19 [IST]
Other articles published on Mar 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+