உலக கோப்பை பைனலில் இந்தியா வெல்லும்.. இதோ 5 காரணங்கள்? ஆஸ்திரேலியாவுக்கு சவால்
அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இந்தியா அணி வீழ்த்துவதற்கான ஐந்து காரணங்களை தற்போது நாம் பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது ஏன் என்று தற்போது பார்க்கலாம். இந்தியாவின் முதல் பலமே தற்போது அவர்கள் அதிரடியான ஆட்டத்தை ஆடுகிறார்கள்.

குறிப்பாக தொடக்கத்தில் ரோகித் சர்மா எதிரணிக்கு அதிரடியாக விளையாடி நாக்அவுட் பஞ்சை வைக்கிறார். இதன் மூலம் பின்வரிசையில் வரும் வீரர்களும் அதிரடியாக விளையாடி பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விளையாடுகிறார்கள். இந்தியாவுக்கு இருக்கும் இரண்டாவது காரணம் விராட் கோலி நல்ல பார்மில் இருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்து உலக சாதனை படைத்த உத்வேகத்தில் அவர் உள்ளார். இது இந்தியாவுக்கு கூடுதல் பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. மூன்றாவது காரணம் இந்தியாவில் நடுவரிசை வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர். கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சுழற் பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் நன்றாக செயல்பட்டு அதிவேகமாக ரன்களை சேர்க்கிறார்கள்.
இது இந்தியாவுக்கு யானை பலத்தை கொடுக்கிறது. இந்தியா வெற்றி பெறுவதற்கான நான்காவது காரணம் நமது வேக பந்துவீச்சாளர்கள் தான். முகமது சமி, சிராஜ், பும்ரா என மூன்று வீரர்களுமே தற்போது சரியான பார்மில் இருக்கிறார்கள்.இந்த மூன்று வீரர்களும் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்கள். முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதால் அது இந்தியாவுக்கு சாதகமாக அமைகிறது.
இந்தியா வெற்றி பெறுவதற்கான ஐந்தாவது காரணம் நமது சுழற் பந்துவீச்சாளர்கள் தான். குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் நன்றாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்கள். மும்பை ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் அவர்களுடைய பந்துவீச்சு எடுபடவில்லை என்றாலும் லீக் கட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆனால் அகமதாபாத் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இது ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும். இந்த ஐந்து காரணங்களும் இந்தியாவுக்கு இருந்தாலும் ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிடாமல் திட்டம் போட்டு செயல்பட்டால் இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம்.
Story first published: Saturday, November 18, 2023, 12:49 [IST]
Other articles published on Nov 18, 2023


Click it and Unblock the Notifications