Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்தை ஒழுங்கா பிடிக்க தெரியாதா? பவுண்டரிக்கு பந்தை விட்ட ராகுல்.. கடுப்பாகி திட்டிய ரோகித் சர்மா

அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் பந்தை பிடிக்க தடுமாறிய விக்கெட் கீப்பர் ராகுலை கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் திட்டிய சம்பவம் அரங்கேறியது.

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 240 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. மின் ஒளியில் புதிய பந்து பயங்கரமாக ஸ்விங் ஆனது. பந்து நன்றாக ஸ்விங் ஆனதால், அதனை பவுலர்களாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் பந்து அங்கேயும் இங்கேயும் பேட்ஸ்மேன்கள் தாண்டி சென்றது.

India vs australia world cup final 2023 - KL Rahul sloppy keeping make Rohit sharma angry

இதனை அனுபவம் வாய்ந்த கீப்பர் மட்டுமே சரியாக பிடிக்க முடியும். ஆனால் கே எல் ராகுல் ஒரு பார்ட் டைம் விக்கெட் கீப்பர் என்பதால் தன்னுடைய திறனையும் மீறி அவர் கடுமையாக செயல்பட்டார். ஆனால் ஒரு சில பந்துகள் அவரைத் தாண்டி சென்றது இந்த நிலையில் ஒன்பதாவது ஓவரின் கடைசி பந்தில் பும்ரா வீசினார். அது சரியாக பவுன்ஸ் ஆகவில்லை. எனினும் இதனை எளிதாக ராகுல் தடுத்து இருக்கலாம்.

ஆனால் அதனை ராகுல் கணிக்க தவறி அதனை பிடிக்கவில்லை. இதனால் பந்து பவுண்டரிக்கு சென்றது. இதனை நம்ப முடியாமல் பும்ரா தன் கையால் முகத்தை மூடிக்கொண்டார். இதனை பார்த்த ரோகித் சர்மா பந்து எழும்பாத நிலையில் அதனை நீ ஏன் சரியாகப் பிடிக்கவில்லை என்று கடுமையாக கோபப்பட்டு திட்டினார். ஆஸ்திரேலிய அணி மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தாலும் களத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய விக்கெட்டை எளிதில் வீழ்த்தினால் மட்டுமே இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும்.

இதனால் போட்டி விறுவிறுப்பான கட்டத்தில் இருக்கிறது. இதனால் கேப்டன் ரோகித் சர்மாவும் தன்னுடைய டென்ஷனை வெளிப்படையாகவே காட்டினார். மேலும் பில்டர்லளை நிற்க வைக்கும் போது கொஞ்சம் டென்ஷன் ஆகி அவர் திட்டிய சம்பவமும் நடைபெற்றது.

Story first published: Sunday, November 19, 2023, 19:35 [IST]
Other articles published on Nov 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+