Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய மண்ணில் 20 ஆண்டு ரெக்கார்டை உடைத்த ஜெய்ஸ்வால் - ராகுல்.. சேவாக் சாதனை முறியடிப்பு.

பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வரும் பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் முதல் விக்கெட்டுக்கு 130 ரன்களுக்கும் மேல் சேர்த்து வரலாற்று சாதனை படைத்தனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய துவக்க ஜோடிகளில் முதல் இடத்தை பிடித்து உள்ளது ஜெய்ஸ்வால் - கே எல் ராகுல் ஜோடி. பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்போது ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருந்தனர்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி ரன் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. அப்போது துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் - கே எல் ராகுல் நிதான ஆட்டம் ஆடினர்.

ஜெய்ஸ்வால் 123 பந்துகளில் நிதானமாக அரைசதம் அடித்தார். பின்னர் கே எல் ராகுலும் அரைசதம் அடித்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 130 ரன்களுக்கும் மேல் சேர்த்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் விக்கெட்டுக்கு கூட்டணியாக அதிக ரன் சேர்த்த ஜோடி என்ற சாதனையை ஜெய்ஸ்வால் - கே எல் ராகுல் படைத்தனர்.

2004 ஆம் ஆண்டு நடந்த சிட்னி டெஸ்ட் போட்டியில் வீரேந்தர் சேவாக் - ஆகாஷ் சோப்ரா கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்து இருந்ததே இதுவரை அதிகபட்ச முதல் விக்கெட் கூட்டணியாக இருந்தது. அந்த சாதனையை ஜெய்ஸ்வால் - கே எல் ராகுல் ஜோடி முறியடித்ததது.

கே எல் ராகுல் இத்துடன் மூன்று முறை "எஸ் ஈ என் ஏ" (SENA) எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் மூன்று முறை துவக்க வீரராக 100 ரன்களுக்கும் மேற்பட்ட கூட்டணிகளில் இடம் பெற்று இருக்கிறார். 2000 மாவது ஆண்டுக்கு பின் இந்த நான்கு நாடுகளில் அதிக முறை 100 ரன்களுக்கும் அதிகமான கூட்டணிகளில் இடம் பெற்ற இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார் கே எல் ராகுல்.

Story first published: Saturday, November 23, 2024, 14:47 [IST]
Other articles published on Nov 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+