Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையில் இந்தியா வெற்றி.. ஆனா இந்த மிடில் ஆர்டர் தான் சரியில்லை

Recommended Video

இறுதி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா !

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தியா, வங்கதேசத்தை கடைசி பந்தில் வீழ்த்தி தன் ஏழாவது ஆசிய கோப்பையை வென்றது.

வங்கதேசம் முதலில் பேட் செய்து 222 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா துவக்கத்தில் நன்றாக ஆடி, பின்னர் விக்கெட் வீழ்ச்சியால் நிதானத்துக்கு மாறியது.

இதனால், ஆட்டம் கடைசி ஓவரின், கடைசி பந்து வரை நீடித்தது. கடைசி பந்தில் ஜாதவ் ஒரு ரன் எடுக்க இந்தியா வெற்றி பெற்றது. இந்தியாவின் நடுவரிசை பேட்டிங் நேற்றும் சொதப்பியது. வெற்றிகள் மற்றும் இந்திய, வங்கதேச அணிகளின் செயல்பாடுகள் குறித்து ட்விட்டரில் குவிந்த ட்வீட்கள் இங்கே.

[ 7வது ஆசிய கோப்பையை வென்ற இந்தியா.. கடைசி பந்தில் வெற்றி.. வங்கதேசம் போராடி தோல்வி ]

வங்கதேச போராட்டம்

விவிஎஸ்.லக்ஷ்மன் தனது ட்வீட்டில், "ஆசிய கோப்பை சாம்பியன் ஆனதற்கு வாழ்த்துக்கள் இந்தியா! வங்கதேசம் நேற்று மிக அருமையான போட்டி மற்றும் மனப்பான்மையை வெளிப்படுத்தியது. ஷகிப், தமிம் இல்லாத நிலையிலும் தங்கள் நிலையை விட்டு நன்றாக போராடினார்கள். கேதார் ஜாதவின் மன உறுதி மற்றும் அர்ப்பணிப்புக்கு பாராட்ட வேண்டும்" என கூறினார்.

நடுவரிசை என்ன ஆச்சு?

ஆகாஷ் சோப்ராவின் ட்வீட்டில், "ஆசிய கோப்பையில் இந்தியா நடுவரிசை பேட்டிங் பிரச்சனைக்கு முடிவு கட்டும் என பார்த்தால், துரதிர்ஷ்டவசமாக தொடர் துவங்கும் முன்பு இருந்ததைவிட இன்னும் மோசமாகி உள்ளது. விடைகள் இங்கே எளிதில்லை" என சுட்டிக் காட்டி உள்ளார்.

கொடுத்த காசுக்கு நல்ல ஆட்டம்

"இந்தியா தன் அனுபவத்தை வைத்து வென்று விட்டது. வங்கதேசம் கடைசி கோட்டை தாண்ட முடியவில்லை. ஆனால், நன்றாக ஆடியது. கடுமையாக போராடிய ஒரு விளையாட்டு. கூட்டத்துக்கு பணம் வசூலாகிவிட்டது" என கூறியுள்ளார் இந்த ரசிகர். நேற்று இந்தியா கடைசி பந்து வரை போட்டியை கொண்டு சென்றதை குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் என்றால் நேபால்

"இந்திய அணி, ஹாங்காங்கை வீழ்த்த தடுமாறியது, ஆப்கானிஸ்தானோடு டை செய்தது, வங்கதேசத்துடனான இறுதி தோல்விக்கு மிக அருகாமையில் வந்தது...... ஆனால், பாகிஸ்தான் என்றால் மட்டும் நேபால் அணியை போல...." என கிண்டல் செய்துள்ளார் இந்த ரசிகர். இந்தியா வலுவான அணியாக கருதப்பட்ட பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியதும், மற்ற சிறிய அணிகளுக்கு எதிராக போராடி வென்றதும் பற்றி கூறுகிறார் இவர்.

இறுதியில் இறுதி : ஒரு சாதனை

"ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் ஒரு இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் வெற்றி தேடி தரும் இரண்டாவது பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ். முதலில் இதை செய்தது மியான்தத்" என நேற்று நடந்த சாதனையை பற்றி குறிப்பிட்டுள்ளார் இந்த ரசிகர்.

Story first published: Saturday, September 29, 2018, 11:18 [IST]
Other articles published on Sep 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+