Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs வங்கதேசம் நாளை முதல் ஒருநாள் போட்டி - எந்த சேனலில் பார்ப்பது? எத்தனை மணிக்கு தொடக்கம்

மிர்பூர் : இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு சீனியர்கள் பங்குபெறும் பலமான இந்திய அணியை வங்கதேச தொடரில் பிசிசிஐ களமிறக்குகிறது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்திற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷிகர் தவான், முஹம்மது சிராஜ், அக்சர் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது முகமது சமிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக முகமது சமி வங்கதேச தொடரிலிருந்து விலகியுள்ளார்.

வங்கதேசம் ஆதிக்கம்

வங்கதேசம் ஆதிக்கம்

அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும், பந்துவீச்சில் போதிய அனுபவம் இல்லாதது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சர்துல் தாக்கூர், தீபக்சாகர், உம்ரான் மாலிக், முகமது சிராஜ் ஆகிய வீரர்களே இடம்பெற்றுள்ளனர் .டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி வெற்றியைப் பெற்றாலும் அந்த ஆட்டத்தில் வங்கதேசமே பெரும்பாலான பகுதியில் ஆதிக்கம் செலுத்தியது.

பனிப்பொழிவு

பனிப்பொழிவு

இந்திய அணியின் பந்துவீச்சை சுக்கு நூறாக லிட்டன் தாஸ் நொறுக்கினார். தற்போது தமீம் இக்பாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் லிட்டன் டாஸ் தான் வங்கதேசம் அணிக்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். இதனால் வங்கதேச தொடர் இந்திய அணிக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது என கருதப்படுகிறது. இதனிடையே வங்கதேசத்தில் தற்போது குளிர் காலம் நிலவுகிறது. இதனால் இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.

எந்த சேனல்?

எந்த சேனல்?

இதனால் போட்டி மதியம் ஒன்றரை மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக இந்திய நேரப்படி காலை11.30மணிக்கு தொடங்குகிறது. இதன் காரணமாக பனிப்பொழிவில் பந்து வீசுவது தடுக்கப்படும். இதில் நாளைய போட்டியில் டாஸ் வெல்லும் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது சிறப்பாக இருக்கும். இந்திய வங்கதேசம் அணிகள் மோதும் ஆட்டத்தை சோனி 1 , சோனி 4, சோனி 5 ஆகிய தொலைக்காட்சிகளில் பார்க்கலாம். இணையதளத்தில் சோனி லிவ் மற்றும் ஜியோ டிவி மூலம் காணலாம்.

Story first published: Saturday, December 3, 2022, 19:08 [IST]
Other articles published on Dec 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+