Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்தை எதிர்கொள்ள இந்தியா தயார்.. ரோகித் சர்மா தேர்வு செய்த பிளேயிங் லெவன்.. யாருக்கு வாய்ப்பு?

டாக்கா : வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி யாரை தேர்வு செய்ய போகிறது என்பதை தற்போது காணலாம்.

ரோகித் சர்மா, கோலி, ராகுல் போன்ற சீனியர்கள் ஓய்வுக்கு பிறகு திரும்பியுள்ளனர். இதனால் இந்தியாவின் பேட்டிங் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

நியூசிலாந்து தொடரில் இந்திய வீரர்களை விட மழை தான் அதிகமாக விளையாடியது. ஆனால் இந்த தொடரில் மழைக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப புள்ளி

ஆரம்ப புள்ளி

வங்கதேச அணியில் தமீம் இக்பால் காயம் காரணமாக விளையாடவல்லை. இதனால் அவருக்கு பதிலாக லிட்டன் தாஸ் அணியை தலைமை தாங்குகிறார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறம் 50 ஓவர் உககோப்பை தொடருக்கு இந்திய அணியை தயார் செய்வதற்கான ஆரம்ப புள்ளியாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது.

 கடும் போட்டி

கடும் போட்டி

தொடக்க வீரர் இடத்திற்கு 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த ஆண்டில் அதிக ரன்கள் விளாசிய இந்திய அணியின் தொடக்க வீரர் என்ற பெயரை வாங்கிய சுப்மான் கில்லுக்கு வாய்ப்பா, இல்லை, ராகுல் டிராவிட்டின் செல்லப் பிள்ளையான கேஎல் ராகுலுக்கு வாய்ப்பா, இல்லை இந்தியாவின் ஆஸ்தான தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு வாய்ப்பா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

நடுவரிசையில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என மூன்று வீரருக்கும் வாய்ப்பு உள்ளது. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பரா, இல்லை ராகுலுக்கு அந்த பொறுப்பை கொடுத்து, கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டரை சேர்க்கலாமா என்ற யோசனையும் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால் பிசிசிஐயின் அரசியல் அதற்கு எல்லாம் இடம் கொடுக்காது. ரிஷப் பண்ட் கண்டிப்பாக விளையாடுவார்.

 பந்துவீச்சாளர்கள் யார்?

பந்துவீச்சாளர்கள் யார்?

சுழற்பந்துவீச்சுக்கு என தனி வீரர் இல்லாததால், வாசிங்டன் சுந்தர், அக்சர் பட்டேலுக்கு தான் பிளேயிங் லெவனில் அதிக வாய்ப்பு கிடைக்கும். எஞ்சியுள்ள 3 வேகப்பந்துவீச்சாளர் இடத்திற்கு முகமது சிராஜ், உம்ரான் மாலிக், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர் என 4 வீரர்கள் இருக்கிறார்கள். இதில் ஷர்துல் வெளியே உட்கார அதிக வாய்ப்புள்ளது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, ஷிகர் தவான், 3, விராட் கோலி, 4, கேஎல் ராகுல், 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, ரிஷப் பண்ட், 7, வாசிங்டன் சுந்தர், 8, அக்சர் பட்டேல், 9, தீபக் சாஹர், 10, முகமது சிராஜ், 11. உம்ரான் மாலிக் / ஷர்துல் தாக்கூர்

Story first published: Saturday, December 3, 2022, 23:12 [IST]
Other articles published on Dec 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+