டாக்கா ஆடுகளத்தால் இந்தியாவுக்கு வந்த ஆபத்து.. இம்முறையும் வானிலை குறுக்கிடுமா? வெற்றி இலக்கு என்ன?
டாக்கா : இந்திய வங்கதேச அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த போட்டி தலைநகர் டாக்காவில் உள்ள சேர் பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதுவரை இந்திய அணி அங்கு 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் இந்திய அணி 14 போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது.
7 போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியில் முடிவில்லாமல் இருந்திருக்கிறது.

டாக்காவால் இந்தியாவின் செயல்பாடு
வங்கதேசத்துக்கு எதிராக டாக்காவில் இந்திய அணி 13 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் இந்திய அணி 9 முறை வெற்றி பெற்றிருக்கிறது. வெறும் மூன்று முறை மட்டும் தான் தோல்வியை தழுவி இருக்கிறது. கடைசியாக இந்திய அணி அங்கு 2015 ஆம் ஆண்டு மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியை தழுவி ரசிகர்களின் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எத்தனை வெற்றி
டாக்கா ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். சில சமயம் பந்து நன்றாக ரிவர்ஸ்விவிங் ஆகும். இதனால் பேட்ஸ்மேன்கள் சிரமப்படுவார்கள். இதுவரை சேர் பங்களா நேஷனல் ஸ்டேடியத்தில் 113 ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. இதில் முதலில் பேட் செய்த அணிகள் 53 முறையும், இரண்டாவது பேகட் செய்த அணிகள் 59 முறையும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.முதலில் பேட் செய்த அணிகளின் ஸ்கோர் சராசரியாக 228 என்ற அளவிலே உள்ளது.

சராசரி ரன்கள்
இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரியாக 197 ரன்கள் என்ற அளவிலே இருக்கிறது. அதிகபட்சமாக டாக்கா ஆடுகளத்தில் இந்திய அணி 370 ரன்கள் அடித்ததே சாதனையாக கருதப்படுகிறது. வங்கதேச அணி 58 ரன்களில் ஆட்டம் இழந்தது, அந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராகும். வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடைசியாக டாக்காவில் நடைபெற்ற அனைத்து போட்டிகளுக்கும் சுழற் பந்துவீச்சு சாதகமான மைதானங்களை தயாரித்து இருக்கிறது.

ஆடுகளம்
இதன் காரணமாக வீரர்கள் ரன் குவிக்க சிரமப்பட்டார்கள். எனினும் இம்முறை ஆடுகளம் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பேட்டிங் பந்துவீச்சு என இரு தரப்புக்கும் சாதகமான ஆடுகளமாக சேர் பங்களா தேசிய கிரிக்கெட் மைதானம் செயல்படும்.இதனால் நாளைய போட்டியில் இந்திய அணி வீரர்கள் வங்கதேசத்தின் சுழற் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது பொருத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.


Click it and Unblock the Notifications