Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்.. பும்ரா, ஷமி இல்லை என்றால் 25 வயது வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு

மும்பை : இந்திய அணி எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் விளையாடாமல் இருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பைத்தியம் பிடித்தாற் போல் மாற்றி இருக்கிறது. பலரும் பழைய கிரிக்கெட் வீடியோஸ் மற்றும் ஹைலைட்ஸ்களை பார்த்து மனசை தேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்னும் இரண்டு வாரத்தில் இந்திய அணி தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக நமது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli

இன்னும் சொல்லப்போனால் துலீப் கோப்பை தொடர் மற்றும் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதல் சுற்று போட்டி செப்டம்பர் 9ஆம் தேதி முடிவடையும் இதில் யார் சிறப்பாக விளையாட்கிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் இந்திய அணி அறிவிப்பு செப்டம்பர் 9ஆம் தேதிக்கு மேல்தான் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான முகமது சமி பும்ரா ஆகியோர் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. பும்ரா தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொண்டதால் அவருக்கு மேலும் ஓய்வு கொடுக்க இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. இதனால் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பும்ராவை ஓய்வு கொடுத்துவிட்டு பின் நியூஸிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம் என இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.

அதே போன்று முகமது சமி தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். இதனால் சமியின் உடல் தகுதி இன்னும் 100% குணமாகவில்லை. இதனால் சமியும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இதனால், 25 வயதான ஆர்ஸ்தீப் சிங், டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது . ஏற்கனவே இடது கை வேகப் பந்துவீச்சாளர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேண்டும் என்ற நோக்கில் கம்பீர் இருக்கிறார்.

இதற்கு சரியான வாய்ப்பாக ஆர்ஸ்தீப் இருப்பார் என தெரிகிறது. வெள்ளை நிற கிரிக்கெட் பந்திலே அபாரமாக பந்து வீசி இருக்கிறார். இதனால், சிவப்பு நிற பந்தை அவர் இன்னும் சிறப்பாக பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலக கோப்பையிலே ஆர்ஸ்தீப் சிங் அபாரமாக செயல்பட்டார். இதனால் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வாய்ப்பு வழங்கி அவருடைய திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய நிர்வாகம் யோசித்து வருகிறது.

இதனால் முகமது சிராஜ்,முகேஷ் குமார் ஆகிய மூன்று வீரர்களும் டெஸ்ட் அணியில் இடம் பெற கூடும். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட் திரும்ப அதிக வாய்ப்பு இருக்கிறது. இரண்டாவது விக்கெட் கீப்பராக துருவ் ஜூரலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் கே எல் ராகுல் இந்த போட்டியில் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதனால் துலீப் கோப்பையில் கே.எல் ராகுல் அதிக ரன்கள் அடித்து தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும். ஏனென்றால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் இல்லை. அப்போது இந்திய அணியில் இடம் பிடித்த சப்ராஸ்கான் மற்றும் தேவுதட் படிக்கல் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார்கள். துருவ் ஜூரலும் தன்னுடைய பேட்டிங்கில் திறமையில் நிரூபித்து விட்டார். இதனால் துருவ் ஜூரலை சாதாரண வீரராக கூட பயன்படுத்த இந்திய நிர்வாகம் யோசித்து வருகிறது. இதனால் கேஎல் ராகுல் துலீப் கோப்பையில் இரட்டை சதம் அடித்தால் மட்டுமே இந்திய அணிக்கு திரும்ப முடியும்.

Story first published: Wednesday, September 4, 2024, 17:39 [IST]
Other articles published on Sep 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+