வாழ்வா? சாவா? கட்டத்தில் இந்தியா.. தொடரை வெல்ல வங்கதேசம் தீவிரம்.. தப்பிக்குமா ரோகித் படை
டாக்கா : இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை புதன்கிழமை நடைபெறுகிறது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வங்கதேச அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் நாளைய போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படகிறது .
ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் இழந்தது. இதனால், இந்த தொடரை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

முக்கிய பொறுப்பு
இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருந்தாலும், பேட்டிங் படுமோசமாக உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் டாப் 3 வீரர்களும் பேட்டிங்கில் சொதப்பினார்கள். இதனால் தவான், ரோகித், கோலி ஆகியோர் கடைசி வரை நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே இந்திய அணி பெரிய இலக்கை எட்ட முடியும்.

அக்சர் பட்டேல்
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அக்சர் பட்டேல் காயம் காரணமாக, முதல் போட்டியில் விளையாடவில்லை. அவர் முழு உடல் தகுதியை எட்டிவிட்டால், இந்திய அணியின் பந்துவீச்சும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை கடைசி கட்ட ஓவர்களில் இந்திய அணி வீரர்கள் சொதப்பி விட்டார்கள், இதனால், அதிலும் கவனம் செலுத்த வேண்டியது உள்ளது.

ஆடுகளம்
நாளைய ஆட்டத்திலும் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு இருக்காது என்றே கருதப்படுகிறது. வங்கதேச அணியின் பேட்டிங்கிலும் குறை இருப்பதால் , அந்த அணியும் அதனை முன்னேற்ற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. பனிப்பொழிவு அதிகம் இருப்பதால், டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீசுவதே சாதகமாக இருக்கும்.

பிளேயிங் லெவன்
1,ரோகித் சர்மா 2, ஷிகர் தவான், 3, விராட் கோலி, 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, கேஎல் ராகுல், 6, வாசிங்டன் சுந்தர், 7, அக்சர் பட்டேல், 8, தீபக் சாஹர், 9, முகமது சிராஜ், 10, ஷர்துல் தாக்கூர், 11, குல்தீப் சென்


Click it and Unblock the Notifications