Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி செயலால் ரசிகர்கள் அதிருப்தி.. இக்கட்டான சூழலிலா இப்படி செய்வது.. 2வது டெஸ்டில் பின்னடைவு

டாக்கா: வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி செய்துள்ள விஷயத்தால் இந்திய ரசிகர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 22ம் தேதியன்று தொடங்கவுள்ளது. டாக்காவில் உள்ள ஸ்ரீ பங்க்ளா மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்த சூழலில் 2வது போட்டியில் பதிலடி கொடுக்க வங்கதேசம் முயலும் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்திய அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் பேட்டிங் சிறப்பாகவே இருந்தது. ஆனால் கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகிய 3 நட்சத்திர வீரர்களுமே சோபிக்க தவறவிட்டனர். குறிப்பாக கேப்டன் கே.எல்.ராகுல் 2 இன்னிங்ஸையும் சேர்த்து 45 ரன்களும், விராட் கோலி 20 ரன்களையும் மட்டுமே அடித்தனர். எனவே 2வது போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு உள்ளது.

கோலிக்கு கட்டாயம்

கோலிக்கு கட்டாயம்

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்த கோலி, இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை நிரூபிக்கவில்லை. 1100 நாட்களாக ( 3 வருடங்களாக ) டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதத்தை கூட அடிக்காமல் கோலி சொதப்பி வருகிறார். இந்த போட்டியில் அந்த காத்திருப்புக்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

கோலி செய்த விஷயம்

கோலி செய்த விஷயம்

இந்நிலையில் தான் விராட் கோலி செய்த விஷயம் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சி வகுப்பில் ஈடுபட்ட போது, கோலி மட்டும், "நான் வரவில்லை" எனக்கூறியிருப்பதாக தெரிகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக நாளைய பயிற்சி முகாமிலும் அவர் பெரியளவில் பங்கேற்கப்போவதில்லை எனக்கூறப்படுகிறது.

கடினமான பிட்ச்

கடினமான பிட்ச்

முதலில் டெஸ்ட் நடைபெற்ற சட்டோகிராம் மைதானத்தை விட, 2வது டெஸ்ட் போட்டி நடைபெறும் ஸ்ரீ பங்க்ளா மைதானம் முற்றிலும் மாறுபட்டதாகும். இங்கு பேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இப்படி இருக்கையில் கோலி பயிற்சி மேற்கொள்ளாமல், எங்கு சென்றுள்ளார்? என்ற விவாதம் இணையத்தில் தீயாய் கிளம்பியுள்ளது.

Story first published: Tuesday, December 20, 2022, 18:20 [IST]
Other articles published on Dec 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+