Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: வரலாற்று வெற்றி.. அதிக வித்தியாசத்தில் வென்று இந்தியா மாஸ் ரெக்கார்டு.. வங்கதேசம் தோல்வி

ஹைதராபாத்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. வங்கதேச அணியை 133 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா அணி. இந்த டி20 தொடரை 3 - 0 என கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர் சஞ்சு சாம்சன் 47 பந்துகளின் 111 ரன்கள் அடித்து இருந்தார். அவர் 8 சிக்ஸ் மற்றும் 11 ஃபோர் அடித்து இருந்தார். அபிஷேக் சர்மா 4 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார். அவர் 8 ஃபோர் மற்றும் 5 சிக்ஸ் அடித்து இருந்தார்.

ind vs ban india bangladesh

அடுத்து வந்த ரியான் பராக் 13 பந்துகளில் 34 ரன்களும், ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 47 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டிலேயே இது இரண்டாவது மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். வங்கதேச அணிக்கு 298 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதை நோக்கி ஆடத் துவங்கிய வங்கதேச அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி அளித்தார் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ். அவர் வீசிய முதல் பந்தில் துவக்க வீரர் பர்வேஸ் உசைன் இந்த டக் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களில் லிட்டன் தாஸ் மற்றும் தவ்ஹீத் ஹிருதோய் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். லிட்டன் தாஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவர் வரை நின்று ஆடிய தவ்ஹீத் 42 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து இருந்தார்.

வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே சேர்த்து 133 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி இந்த டி20 தொடரை 3 - 0 என வென்று வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்தது.

Story first published: Saturday, October 12, 2024, 22:54 [IST]
Other articles published on Oct 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+