Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN - இதை கவனச்சீங்களா? இந்தியா சாதித்தாலும், கேப்டன் செய்த 2 மெகா தவறுகள்

ஐதராபாத் : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது t20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்து சர்வதேச அளவில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்தியா சிறப்பாக விளையாடினாலும் சில கவனிக்க வேண்டிய தவறுகளை செய்திருக்கிறது. இந்தியா இவ்வளவு சாதித்தும் குறை கூறுவது சரியா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஜாம்பவான் கேப்டன் தோனியின் ஸ்டைலே எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றாலும் அது நாம் செய்யும் தவறுகளை மறைக்காது.

ind vs ban sanju samson suryakumar yadav hardik pandya

அந்த தவறுகளை நாம் சரி செய்தால் மட்டுமே அந்த வெற்றி தொடரும் என்று எப்போதும் கூறுவார். எனவே தோனியின் அறிவுரையின் அடிப்படையில் இந்தியா மூன்றாவது டி20 போட்டியில் இரண்டு தவறுகளை செய்திருக்கிறது. அதன்படி டி20 தொடரை இந்தியா ஏற்கனவே வெற்றி பெற்ற நிலையில் ஹைதராபாத்தில் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் ஒரே ஒரு ஓவரை மட்டும் தான் அபிஷேக் ஷர்மாவுக்கும் வாஷிங்டன் சுந்தருக்கும் வழங்கியிருக்கிறார்.

ஆனால் ஆல்ரவுண்டராக வளர்க்கப்படும் ரியான் பராக்கிற்கு இந்த ஆட்டத்தில் ஓவர்களே வழங்கப்படவில்லை. இது போன்ற சூழலில் இந்த பகுதி நேர ஆல்ரவுண்டர்களுக்கும் ஓவர்களை வழங்கி அவர்களுடைய திறமையை சோதித்து இருக்கலாம். இதனை சூரியகுமார் யாதவ் மிஸ் செய்து விட்டார். இந்திய அணி செய்த அடுத்த தவறு நிதீஷ் குமார் போன்ற அனுபவம் இல்லாத ஒரு இளம் வீரரை பவர் பிளேவில் பந்து வீச சொன்னது தான்.

இதில் நிதிஷ்குமார் ஐந்து பவுண்டரிகளை வழங்கி விட்டார். அதன் பிறகு அவர் இரண்டு ஓவர்கள் வீசி ரன்களை கட்டுப்படுத்தினாலும், பவர் பிளேவில் நிதீஷ் குமாரை பயன்படுத்தி இருக்க தேவையில்லை. இதேபோன்று ஹர்திக் பாண்டியா ஓவரிலும் ரன்கள் சென்றாலும் வாஷிங்டன் சுந்தர் ஒரு கேட்சை தவறவிட்டார். இது ஹர்திக் பாண்டியாவின் ஓவரையே கெடுத்து விட்டது.

எனினும் இந்த தவறு இந்தியாவின் வெற்றியை பெரும் அளவில் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வல்லுனர்கள் பெரிய இலக்கை நிர்ணயித்து விட்டோம் என்பதால் இந்திய இளம் வீரர்களுக்கு பவர் பிளேவில் வாய்ப்பு வழங்கி இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Story first published: Sunday, October 13, 2024, 9:10 [IST]
Other articles published on Oct 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+