மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும் வங்கதேச அணியும் புதன்கிழமை எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தோல்வியே தழுவாமல் இந்த தொடரில் விளையாடி வருகிறது.
அதேசமயம் வங்கதேச அணியை பொறுத்தவரை கடைசியாக இலங்கையை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்தியாவை சந்திக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுனுமே வங்கதேச அணி பாகிஸ்தானை விட நன்றாகவே செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தியாவுக்கு வங்கதேச ஆட்டம் கேக் வாக்காக இருக்காது என எதிர்பார்க்கலாம். எனினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக 17 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 16 டி20 போட்டிகளில் வென்று இருக்கிறது. முதலில் இந்திய அணி வங்கதேசத்தை போட்டியில் பிளேயிங் லெவனை ஏதேனும் மாற்றம் கொண்டு வருமா என்பதை தற்போது பார்க்கலாம்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பும்ரா தடுமாறியதால் அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டு இருக்கலாமா என அஞ்சப்படுகிறது. எனினும் பும்ரா வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாட முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று சஞ்சு சாம்சன் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பெரிய அளவு சாதிக்கவில்லை. இதனால் பேட்டிங் வரிசையில் அவரை மூன்றாவது வீரராக களம் இறக்கலாமா என்ற ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது.
இதைத் தவிர இந்திய அணியில் வேறு எந்த ஒரு மாற்றமும் செய்யப்படாது எனக் கூறப்படுகிறது. வங்கதேச அணியை பொறுத்தவரை கேப்டன் லிட்டன் தாஸ்க்கு முதுகு வலி ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. எனினும் அவர் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் களமிறங்க கூடும்.
இந்தியா உத்தேச அணி: 1 அபிஷேக் ஷர்மா, 2 ஷுப்மன் கில், 3 திலக் வர்மா, 4 சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 5 சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 6 ஷிவம் துபே, 7 ஹார்திக் பாண்டியா, 8 அக்ஸர் படேல், 9 குல்தீப் யாதவ், 10 ஜஸ்பிரீத் பும்ரா, 11 வருண் சக்ரவர்த்தி
வங்கதேசம் உத்தேச அணி: 1 சைஃப் ஹசன், 2 தன்ஜித் ஹசன், 3 லிட்டன் தாஸ் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 4 தவ்ஹித் ஹ்ரிடோய், 5 ஷமிம் ஹொசைன், 6 ஜாக்கர் அலி, 7 மஹேதி ஹசன், 8 நசும் அஹ்மத், 9 தஸ்கின் அஹ்மத், 10 தன்ஜிம் ஹசன், 11 முஸ்தாஃபிசுர் ரஹ்மான்