இந்தியா vs வங்கதேசம் - மிரட்டும் மழை.. பிளேயிங் லெவனில் யாருக்கு வாய்ப்பு..ஆடுகளம் எப்படி இருக்கும்
அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி நாளை வாழ்வா - சாவா - என்ற ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. நாளை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டாலும், மாலை நேரத்தில் மழை இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறைந்தது 5 ஓவர்கள் போட்டியாவது இந்தியா, வங்கதேசத்துக்கு இடையே வாய்ப்பு இருக்கிறது.

அடிலெய்ட் மைதானம்
இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்றால் அது ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட்டில் தான். அடிலெய்ட மைதானம், ஒரு அளவுக்கு இந்திய மைதானங்கள் போல் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும். பந்தும் பெரிதாக ஸ்விங் அகாது. இதனால் ஃபார்ம்க்கு திரும்ப காத்திருக்கும் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கு அடிலெய்ட் ஏற்ற மைதானமாகும்.

யாருக்கு சாதகம்
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின், அக்சர் பட்டேல், சாஹல் போன்ற வீரர்களுக்கு அடிலெய்ட் மைதானம் சாதகமாக செயல்படும். ஆசிய ஆடுகளம் போல் இருக்கும் என்றால், அது இந்தியாவுக்கு மட்டுமல்ல வங்கதேச அணி வீரர்களுக்கும் சாதகமாக தான் இருக்கும். பெரிய மைதானம் என்பதால் , லாங் ஆன், லாங் ஆஃப் பகுதிகளில் அடித்து ஆடும் போது கேட்சாக அதிக வாய்ப்பு உள்ளது.

வானிலை
இந்த நிலையில், மழை பெய்யும் என்பதால், டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தான் தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலக்கை தெரிந்து கொண்டு சேஸிங் செய்யும் போது ஏதுவாக இருக்கும். நாளைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் விளையாடுவது சந்தேகமே. இதே போன்று தீபக் ஹூடாவுக்கு பதில் அக்சர் பட்டேல் அணிக்கு திரும்புகிறார்.

பிளேயிங் லெவன்
1, கே.எல் ராகுல், 2, ரோகித் சர்மா, 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6,ரிஷப் பண்ட் / தினேஷ் கார்த்திக், 7. அக்சர் பட்டேல், 8, அஸ்வின், 9,புவனேஸ்வர் குமார், 10, முகமது ஷமி, 11, ஆர்ஸ்தீப் சிங்


Click it and Unblock the Notifications