For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs BAN - பழைய வடிவத்தில், புதிய பகை.. வங்கதேச நாகினி டான்ஸ்களை mute செய்யுமா இந்தியா?

மும்பை : கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி என்பது ஒரு அங்கமாக இருக்கிறது. ஆனால் வங்கதேசத்துக்கு எதிராக மட்டும் தோல்வியை தழுவி விடக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு பெரிய அணிகளில் உத்வேகமாக இருக்கிறது. காரணம் வங்கதேச அணியின் ரசிகர்கள் செய்யும் சேட்டை தான் வங்கதேச அணி கிரிக்கெட் பல ஆண்டுகளாக இருந்தாலும் அவர்களால் பெரிய அளவில் எந்த ஒரு தாக்கத்தையும்
ஏற்படுத்த முடியவில்லை.

ஆனால் தாங்கள் ஏதோ ஆஸ்திரேலிய அணி போல் நினைத்து கொள்ளும் வங்கதேச ரசிகர்கள் மற்ற அணி ரசிகர்களை கிண்டல் செய்வது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் தான் அப்படி என்றால் வீரர்கள் ஒரு படி மேல் நடந்து கொள்வார்கள். களத்தில் பெரிய அளவில் சாதிக்காமல் இருந்தாலும் வாய் பேச்சில் வீரர்களாக வங்கதேச அணியினர் திகழ்ந்திருக்கிறார்கள்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli


அப்படி ஏதேனும் ஒரு போட்டியில் பெரிய அணியை வீழ்த்த நேர்ந்தால் உடனே நாகினி டான்ஸ் என்று ஒரு ஆட்டத்தை ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெறுப்பேற்றுவார்கள். இப்படி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நிடாஸ் கோப்பை தான் வங்கதேச அணி இலங்கையை வீழ்த்தியது. அப்போது வங்கதேச வீரர்கள் முதன்முதலாக களத்தில் நாகினி டான்ஸ் ஆடி ஒட்டுமொத்த இலங்கை ரசிகர்களையும் வெறுப்பேற்றினர்.

அதன்பிறகு இந்தியாவுக்கு எதிராக இறுதி போட்டியில் மோதிய போது ஷிகர் தவான் விக்கெட்டை எடுத்தவுடன் வங்கதேச வீரர் நாகினி டான்ஸ் ஆடி இந்திய ரசிகர்களையும் வெறுப்பேற்றினார். அந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவும் நிலையில் இருந்தது. கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் அடிக்க வேண்டிய சூழலில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 19ஆவது ஓவரின் இரண்டு சிக்ஸர் இரண்டு பவுண்டரி அடித்து 22 ரன்கள் குவித்தார். இதனை எடுத்து கடைசி ஓவரில் 12 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது.

அப்போது வங்கதேச வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர். கடைசி ஓவரில் விஜய் சங்கர் விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் பலார் என்று ஒரு சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். அதன் பிறகு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வங்கதேசத்தை வைத்து செய்தது. இதனால் வங்கதேச நாகினிகள் இந்தியா மீது வன்மத்தை தொடர்ந்து கொட்டிக் கொண்டு இருந்தார்கள்.

இந்த நாகினி டான்ஸ் வருவதற்கு முன்பே இந்தியா மீது வங்கதேச வீரர்கள் வன்மத்தை கொட்டிக் கொண்டுதான் இருந்தார்கள். 2016 டி20 உலக கோப்பையில் இந்திய அணி வங்கதேசத்தை கடைசி பந்தில் வீழ்த்தியது இதனால் இந்தியா மீது வண்ணத்தில் இருந்த வங்கதேச வீரர்கள் அரைருதியில் வெஸ்ட் இண்டீஸ் எதிர் கொண்டு இந்தியா தோல்வியைத் தழுவியது.

அப்போது வங்கதேச வீரர் முசுபிகுர் ரஹீம் தொலைக்காட்சி முன் நின்று ஜாலியாக செல்பி எடுத்து இந்தியா தோல்வி தழுவியதை கொண்டாடினார். வங்கதேச அணி கிரிக்கெட்டில் கொஞ்சம் முன்னேறி இருந்தாலும் தங்களுடைய மோசமான நடவடிக்கை காரணமாக பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்காமல் உள்ளது. தற்போது பாகிஸ்தானை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய வங்கதேச அணி தற்போது இந்தியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இதுவரை டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் கூட வங்கதேசம் வெற்றி பெற்றதில்லை. இதனால் ஒருவேளை இந்தியாவிற்கு எதிராக முதல் வெற்றியை அந்த அணி பெற்றால் நிச்சயம் வங்கதேச வீரர்கள் ரசிகர்கள் என அனைவரும் நாகினி டான்ஸ் ஆடி இந்தியாவை நிச்சயம் வெறுப்பேற்றுவார்கள். இந்த ஆபத்திலிருந்து இந்திய ரசிகர்களை காப்பாற்ற ரோஹித் சர்மா படை கொஞ்சம் கூட அலட்சியமாக விளையாடாமல் வங்கதேச அணியை நொறுக்கி விட வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Story first published: Monday, September 9, 2024, 21:54 [IST]
Other articles published on Sep 9, 2024
English summary
India vs Bangladesh rivalry - Nagini dance in Nidhas trophy to Mushfiqur rahim selfie IND vs BAN - பழைய வடிவத்தில், புதிய பகை.. வங்கதேச நாகினி டான்ஸ்களை mute செய்யுமா இந்தியா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+