Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16 ரன்கள் எடுக்க தான் அணிக்குள் வந்தீங்களா ராகுல்.. சர்பராஸ் கானை நீக்கியது ஏன்? ரசிகர்கள் ஆத்திரம்

சென்னை : இந்திய வங்கதேசம் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து சர்பராஸ் கான் அதிரடியாக நீக்கப்பட்டார். 26 வயதான சர்பராஸ்கான் உள்ளூர் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வந்தார்.ஒரு கட்டத்தில் டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் வீரராக சர்பராஸ்கான் விளங்கினார்.

எனினும் சப்ராஸ்கானுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சர்பராஸ்கான் அறிமுகமாகி தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்தார்.

india vs bangladesh ind vs ban cricket kl rahul

இதேபோன்று தர்மசாலாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியிலும் சர்பராஸ் கான் அரை சதம் அடித்தார். இந்தத் தொடரில் கே எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக தான் சர்பராஸ்கானுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் கே எல் ராகுல் மீண்டும் தனது உடல் தகுதியை எட்டியதை அடுத்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சேர்க்கப்பட்டார்.

இந்த சூழலில் சர்பராஸ் கான் கேஎல் ராகுலை விட நல்ல ஃபார்மில் இருப்பதால் அவருக்கு தான் முன்னுரிமை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கே எல் ராகுல் சீனியர் வீரர் என்று காரணத்தைக் காட்டி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறியது. 96 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறிய போது கே எல் ராகுல் களத்திற்குள் வந்தார்.

ராகுல், ஜெய்ஸ்வால் ஜோடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல் 52 பந்துகளுக்கு எதிர்கொண்டு வெறும் 16 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி மட்டுமே அடங்கும். மெஹதி ஹசன் வீசிய பந்தில் கே எல் ராகுல் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனால் இந்தியாவுக்கு மேலும் பிரச்சனை அதிகரித்தது.

ராகுல் இந்த இன்னிங்ஸால் இந்திய ரசிகர்கள் கடுப்பாகினர். நல்ல பார்மில் இருந்த சர்பராஸ்கான் தேவையில்லாமல் அணியை விட்டு நீக்கி இந்தியா தவறு செய்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதே ஒரு சூழலில் சர்பராஸ்கான் களம் இறங்கி இருந்தால் அவர் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்து இருப்பார் என்றும் சுழற் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டிருப்பார் என்றும் ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.ஆனால் தற்போது சர்பராஸ்கான் தன்னுடைய திறமையை நிரூபித்தும் சீனியர் ஜூனியர் என்ற காரணத்தைக் காட்டி அணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர்.

Story first published: Thursday, September 19, 2024, 15:27 [IST]
Other articles published on Sep 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+