For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன குட்டிப் புலி.. 107 ரன்னை சேஸ் செய்ய முடியாதா? அண்டர் 19 ஆசிய கோப்பை இறுதியில் வென்றது இந்தியா!

கொழும்பு : அண்டர் 19 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அண்டர் 19 அணி.

மிகவும் குறைந்த ஸ்கோர் எடுத்த போட்டியாக நடந்த இந்த இறுதி மோதலில், வங்கதேச அணி 107 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் பரிதாபமாக தோல்வி அடைந்தது.

இந்திய அணி பேட்டிங்கில் மோசமாக சொதப்பினாலும், பந்துவீச்சில் கலக்கி கோப்பையை வென்றது. இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் அன்கோலேகர் 5 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அது என்ன குட்டிப் புலி?

அது என்ன குட்டிப் புலி?

வங்கதேச அணி ரசிகர்கள் தங்கள் அணியை புலிகள் (டைகர்ஸ்) என அழைத்து வருகிறார்கள். வங்கதேச அண்டர் 19 அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போது ஜூனியர் டைகர்ஸ் (அது தான் குட்டிப் புலி) என பில்டப் கொடுக்கப்பட்டது. பந்துவீச்சில் திணறடித்த குட்டிப் புலி அணி, பேட்டிங்கில் கோட்டை விட்டது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. கேப்டன் ஜுரல் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால், அந்த முடிவு தவறு என்பது போட்டியின் ஆறாவது ஓவரிலேயே தெரிந்தது. வங்கதேசம் அந்த அளவுக்கு விக்கெட் வேட்டை நடத்தியது.

பேட்டிங் தடுமாற்றம்

பேட்டிங் தடுமாற்றம்

இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் 4, 0, 2 என சொற்ப ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 5.1 ஓவரில் இந்தியா 8 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. 50 ஓவர் வரை இந்தியா சமாளிக்குமா? என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது.

கை கொடுத்த இருவர்

கை கொடுத்த இருவர்

3 விக்கெட் இழந்த நிலையில் கேப்டன் ஜூரல் 33 ரன்கள் எடுத்து அணியை ஓரளவு மீட்டார். எட்டாவது வரிசையில் களமிறங்கிய கரண் லால் 37 ரன்கள் எடுத்து இந்திய அணியின் மானம் காத்தார். இவர்கள் இருவர் தவிர்த்து ராவத் 19 ரன்கள் எடுத்ததே அதிகம்.

குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 32.4 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக ஆட்டமிழந்தது. இந்த குறைந்த ஸ்கோரை வைத்து ஆசிய கோப்பை வெல்ல வாய்ப்பே இல்லை என்றே கருதப்பட்டது.

வங்கதேசம் வீழ்ச்சி

வங்கதேசம் வீழ்ச்சி

ஆனால், குட்டிப் புலிகள் இந்திய அணியை ஏமாற்றவில்லை. 4.1 ஓவர்களில் 16 ரன்கள் எடுத்து 4 விக்கெட்களை இழந்தது வங்கதேசம். இந்திய அணியைப் போலவே, வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலி 23, எட்டாம் வரிசை பேட்ஸ்மேன் மிருதுஞ்சய் 21 ரன்கள் சேர்த்தது மட்டுமே அதிகம்.

இலக்கை எட்டவில்லை

இலக்கை எட்டவில்லை

மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆடினர். 33 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது வங்கதேசம். 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய அண்டர் 19 அணி.

கலக்கிய சுழற் பந்துவீச்சாளர்

கலக்கிய சுழற் பந்துவீச்சாளர்

இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் அன்கோலேகர் 5 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் சிங் டாப் ஆர்டர் மற்றும் மிடில் வீரர்களின் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆசிய கோப்பை வெற்றி

ஆசிய கோப்பை வெற்றி

இறுதிப் போட்டியில் வென்ற இந்திய அண்டர் 19 அணி ஆசிய கோப்பை வென்று அசத்தியது. முன்னதாக குரூப் சுற்றில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் குவைத் அணிகளை வீழ்த்தி இருந்தது இந்திய அணி.

பிட்ச் சரியில்லை

பிட்ச் சரியில்லை

இலங்கையின் கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் நடந்த இந்த போட்டிக்கான பிட்ச் படு மோசமாக இருந்ததே இரு அணிகளும் குறைந்த ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க முக்கிய காரணம். மோசமான ஆடுகளத்திலும் இந்திய அண்டர் 19 அணி சாதித்துள்ளது.

Story first published: Saturday, September 14, 2019, 19:11 [IST]
Other articles published on Sep 14, 2019
English summary
India vs Bangladesh Under-19 Asia Cup final result and highlights
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+