Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலிறுதியிலும் இந்தியாவிடம் சிக்கியது 'பச்சை சட்டை'.. இப்பவே "ஜெயித்த" உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆக்லாந்து: உலக கோப்பை காலிறுதி போட்டியில், வங்கதேசத்தை, இந்தியா எதிர்கொள்ளப்போவது கன்பார்ம் ஆகியுள்ளது. நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், வங்கதேசம் தோற்றதால், போட்டி அட்டவணைப்படி, அந்த அணி இந்தியாவிடம் ஆடவேண்டியுள்ளது.

நம்மிடம் மீண்டும் ஒரு 'பச்சை சட்டை' கிடைத்த மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்கின்றனர் ரசிகர்கள்.

பாகிஸ்தானை வீழ்த்தியது

பாகிஸ்தானை வீழ்த்தியது

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா சந்தித்தது. அந்த போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது.

மூன்று முறை தோல்வி

மூன்று முறை தோல்வி

தென் ஆப்பிரிக்காவிடம் அதற்கு முன்பு மூன்று முறை இந்திய அணி மோதியுள்ளது. ஆனால் அனைத்திலும் இந்தியா தோற்றிருந்தது. எனவே இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

தென் ஆப்பிரிக்காவுக்கு மரண அடி

தென் ஆப்பிரிக்காவுக்கு மரண அடி

அந்த போட்டியில், இந்தியா 130 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்பிரிக்காவை அசத்தலாக தோற்கடித்து அசத்தியது.

பச்சை சட்டை போட்டா அடிப்போம்

பச்சை சட்டை போட்டா அடிப்போம்

அப்போதுதான் சமூக வலைத்தளங்களில் ஒரு மெமீஸ் வைரலாக பரவியது. "நாங்கள் பாகிஸ்தான் இல்லை, எங்களை ஏன் இப்படி போட்டு அடித்தீர்கள்" என்று தென் ஆப்பிரிக்க வீரர்கள் கேட்பது போலவும், பச்சை சட்டையை பார்த்ததும் நாங்கள் அடித்து நொறுக்கினோம் என்பது போலவும் கேலி சித்திரங்கள் பரவின. அதாவது, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளின் சீருடை பச்சை கலர் என்பதை குறிப்பிட்டு இப்படி ஒரு மீமிஸ் உருவானது.

வடிவேலு காமெடி

வடிவேலு காமெடி

காலேஜ் வார்டன் கதாப்பாத்திரத்தில், வடிவேலு ஒரு படத்தில் நடித்திருப்பார். சிறைக்குள் ஒரு வார்டனிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்ட ரவுடிகள், வடிவேலுவை அடித்து நொறுக்குவார்கள். ஏன் என்று கேட்டால், நீயும் ஒரு வார்டன்தானே, அதான் அடித்தோம் என்று ரவுடிகள் கூறுவார்கள். நான் காலேஜ் வார்டன்தானே.. என்று வடிவேலு கூற, ரவுடிகளோ, அசட்டிக் கொள்ளாமல், அதெல்லாம் தெரியாது, வார்டன் என்றால் அடிப்போம் என்று கூறுவார்கள். அதே காமெடியைத்தான் பச்சை சட்டை போட்டால் அடிப்போம் என்று மாற்றினர் நமது நெட்டிசன்கள்.

சிக்கியவை பச்சை சட்டைகள்

சிக்கியவை பச்சை சட்டைகள்

இந்தியா மொத்தம் 6 அணிகளுடனும் லீக் போட்டியில் மோதியுள்ளது. அதில், மூன்று அணிகள் பச்சை சீருடை போட்டவைதான். பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா தவிர அயர்லாந்துக்கும் அதே யூனிபார்ம்தான். இம்மூன்று அணிகளுடனும் சிறப்பான வெற்றியை இந்தியா பெற்றது.

சிவப்பு என்றால் ஆகாதோ

சிவப்பு என்றால் ஆகாதோ

சிவப்பு சீருடை போட்டிருந்த வெஸ்ட் இண்டீசிடம் சற்று போராடி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றோம். இன்றும்கூட சிவப்பு சட்டை போட்ட ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பிரெண்டன் டைலர் அடித்து நொறுக்கி சதம் விளாசிவிட்டார்.

ரசிகர்கள் ஆரவாரம்

ரசிகர்கள் ஆரவாரம்

இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் கடைசி இடம் பிடித்த வங்கதேசமும், குரூப் பி பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியாவும்தான் காலிறுதியில் மோத உள்ளன. வங்கதேசத்தின் யூனிபார்மும் பச்சைதான். எனவே, இப்போதே ரசிகர்கள் குதுகலிக்க ஆரம்பித்துள்ளனர். அது வங்கதேசம் இல்லை, பாகிஸ்தான் என்று நினைத்துக்கொண்டு அதிரடி ககாண்பியுங்கள் என்று சமூக வலைத்தளங்களில், ரசிகர்கள், உசுப்பேற்றி வருகின்றனர்.

Story first published: Saturday, March 14, 2015, 10:04 [IST]
Other articles published on Mar 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+